)
Mandaadi Shooting Accident : நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, இப்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் சைன் செய்த படம் ‘மண்டாடி’. இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் விபத்து ஏற்பட்டுள்ளது.
மண்டாடி படப்பிடிப்பில் விபத்து:
வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களில் ஹீரோவாக நடித்த சூரிக்கு, அதன் பிறகு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்துமே ஹீரோவாகத்தான் இருக்கிறது. இப்போது காமெடியனாக நடிக்க யாருமே அவரை அழைப்பதில்லை. அவரும் அதை விரும்புவதில்லை.
ஸ்போர்ட்ஸ் டிராமா கதையாக உருவாகி வருகிறது, மண்டாடி. இதில் சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி படத்தை இயக்குகிறார். இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் சுஹாஸ், மகிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் சூரி வித்தியாசமாக முடி வளர்த்து, இதுவரை நடித்திராத ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பில் விபத்து!
மண்டாடி படத்தின் படப்பிடிப்பு, இராமநாதபுரத்தின் தொண்டி என்கிற கடற்பகுதியில் நடந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியுள்ளது. இதில் படகில் இருந்த இரண்டு பேர் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கினர். இவரை போராடி கடலில் இருந்து மீட்டனர்.
பொருட்கள் சேதம்..பல லட்சம் நஷ்டம்!
மண்டாடி படத்தில் படகு கவிழந்த விபத்தில், எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பது நிம்மதியளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. இதில், நடிகர் சூரிக்கும் ஒன்றும் ஆகவில்லை என்றும் அந்த பகுதியை சேர்ந்த காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத்தாண்டி, படகுடன் சேர்ந்து, படப்பிடிப்புக்கு பயன்படுத்திய கேமராக்கள் உள்பட சில சாதனங்கள் கடலில் மூழ்கியுள்ளது. இதனால், படக்குழுவிற்கு பல லட்சம் மதிப்பிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் விபத்து ஏற்பட்டது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்டாடி என்றால் என்ன?
இந்த படத்தின் தலைப்பே பலருக்கு புரியவில்லை. இது தெரிந்தால், ஏன் கடலில் படப்பிடிப்பு நடந்தது என்பதையும், படக்குழு ஏன் படகில் படப்பிடிப்பை நடத்தினர் என்பதும் தெரியும்.
பொதுவாக கடலில் மீன்பிடிக்க செல்கையில், எங்கெல்லாம் மீன்கள் அதிகமாக கிடைக்கும் என்பதையும், காற்று மற்றும் அலையின் நீரோட்டத்தை நன்கு கண்டரித்து மீன் வரத்தை கணிக்கும் அறிவையும் அனுபவத்தையும் கொண்டவரைத்தான் மண்டாட்டி என்று அழைப்பார்களாம். இவர்கள், மீன்பிடிக்க செல்லும் படகினை வழிநடத்துபவராக இருப்பார்களாம். தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அதை சுற்றியிருக்கும் பகுதிகளில் ’மண்டாட்டி’ எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ