அவரா இது? கொடூர நோயால் அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல நடிகர்!

Abhinay Kinger Liver Disease : தமிழ் திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்தவர் அபினய். இவரது தற்போதைய நிலை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு வந்திருக்கும் நோயாளி இவர் தற்போது அவதிப்பட்டு வருகிறார்.  

Written by - Yuvashree | Last Updated : Mar 6, 2025, 06:26 PM IST
  • துணை நடிகரின் அவல நிலை..
  • நுரையீரலில் நோய் பாதிப்பு..
  • ரசிகர்கள் வேதனை..
அவரா இது? கொடூர நோயால் அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல நடிகர்!

 Abhinay Kinger Liver Disease : துள்ளுவதோ இளமை தனுஷ்  நடித்த நடிகர் தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறு வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்த நிலைக்கு காரணம் என்ன?

Add Zee News as a Preferred Source

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகம்..

இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் நடிகர் அபிநய் ..இந்தப் படத்தில் அபிநயுடன் தனுஷ், ஷெரின் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவின் அபிநய தனுஷ் ஷெரின் என மூவருக்குமே  ஒரு தனி  அடையாளத்தை கொடுத்தது. அதைத்தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார் அபிநய். ஆனால் அந்த திரைப்படம்  பெரிய அளவில் எடுபடவில்லை.

2000 ஆம் ஆண்டுக்கு  பிறகு அவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பாலைவன சோலை போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார் .  அதுபோல துப்பாக்கி, அஞ்சான் திரைப்படத்தில் நடிகர் வித்யூக் ஜாம் வால்யூவுக்கு இவர்தான் பின்னணி குரல் வழங்கி இருந்தார். அதேபோல பிஸ்கட் மற்றும்  டீ  விளம்பரங்களில் நடித்திருந்தார். 

சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை..

இந்த நிலையில் தான் சில வருடங்களாக இவர் சினிமா மற்றும் விளம்பரங்களில் பெரிதாக தென்படவில்லை. இப்போது திடீரென தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் அவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது.  சாக்லேட் பாயாகவும் அமெரிக்க மாப்பிள்ளை ஆகவும் சினிமாக்களில் வலம் வந்த  இவர் லிவர் சிரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

மேல் சிகிச்சைக்காக மேலும் தனக்கு 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும் அதனால் உதவி செய்யுமாறு உருக்கமாக கேட்டிருக்கிறார். 43 வயதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அபிநய் மாறி இருக்கிறார். அதே போல அவருடைய வயிற்றுப் பகுதி அளவுக்கு அதிகமாக வீங்கி இருக்கிறது. அவருடைய வயிற்றுப் பகுதியில் இருந்து டியூப் மூலமாக சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோக்களை அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இது ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது.

தமிழ் திரையுலகை சேர்ந்த துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படி தங்களது சிகிச்சைக்காக பணம் இல்லாமல் திணறி வருவது அடிக்கடி பார்க்கும் செய்தியாக மாறிவிட்டது. அபிநய்யின் இது நிலையும் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. இவர், விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | அடையாளமே தெரியாமல் மாறிப்போன அஜித்!! எலும்பும் தோலுமா ஆயிட்டாரே..வைரல் போட்டோஸ்

மேலும் படிக்க | Nivetha Thomas: அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை நிவேதா தாமஸ்!! வைரல் போட்டோஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News