Akshay Kumar To Provide Insurance For Stunt Masters : சமீபத்தில், பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பில், சண்டை பயிற்சியாளர் எஸ்.எம்.ராஜூ உயிரிழந்தார். இதையடுத்து, அனைத்து சண்டை பயிற்சியாளர்களுக்கும் அக்ஷய் குமார் இன்சூரன்ஸ் எடுத்துள்ளார்.
பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பில், சில நாட்களுக்கு முன்பு சண்டை பயிற்சியாளர் எஸ்.எம்.ராஜூ உயிரிழந்தார். படப்பிடிப்பில் நடந்த இந்த சம்பவம், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாரஞ்சித் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு, இயக்குநர் ரஞ்சித்தும் இது எதிர்பாராத விபத்து என்று விளக்கம் கொடுத்திருந்தார். என்னதான் இருந்தாலும், போன உயிரை யாராலும் இனி திரும்ப கொண்டு வர முடியாது என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் அக்ஷய் குமார், அனைத்து சண்டை கலைஞர்களுக்கு உபயோகமாக இருக்கும் வகையில் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.
அக்ஷய் குமார் செய்த உதவி:
சினிமாவில் இருக்கும் ஸ்டண்ட் கலைஞர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இதை கருத்தில் கொண்டு, ஸ்டண்ட் கலைஞர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவும் வகையில் அக்ஷய் குமார், உதவ முன்வந்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள 650 ஸ்டண்ட் சண்டை பயிற்சியாளர்களுக்கு (ஆண்/பெண்) தலா ரூ.10 லட்சத்தை காப்பீட்டு தொகையாக வழங்க முன்வந்திருக்கிறார். இதில் சிறப்பான விஷயமே, இந்த காப்பிட்டின் முழு தொகையையும் அக்ஷய் குமாரே தனிப்பட்ட முறையில் செலுத்துகிறாராம்.
யோசிக்காமல் செய்த உதவி!
மேற்கூறிய ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் உயிரிழப்பை தொடர்ந்து, சினிமா ஸ்டண்ட் கலைஞர்களின் தலைவர் எஜாஸ் குலாப் சண்டை பயிற்சியாளர்களுக்கு உதவுமாறு, அக்ஷய் குமாரை தொடர்பு கொண்டு உதவி புரிய சொல்லி கேட்டிருக்கிறார். இதைக்கேட்ட அவர், கொஞ்சம் கூட யோசிக்காமால் இந்த உதவியை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து எஜாஸ் குலாப் பேசுகையில், தாங்கள் இது பற்றி அக்ஷய்யிடம் தெரிவித்த போது அவர் உடனடியாக உதவி செய்ய ஒப்புக்கொண்டதாகவும் அவரது உதவியால் இனி சண்டை பயிற்சியாளர்களின் குடும்பம் நிதி நெருக்கடியை சந்திக்காது என்றும் தெரிவித்தார்.
ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கான சம்பளம்:
சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில், 10% கூட அவர்களின் படத்தில் சண்டை பயிற்சியாளர்களாக இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. சண்டை பயிற்சியாளர்கள் சங்கத்தில் சேருவதற்கு மட்டும், ரூ.3.60 லட்சம் வரை கேட்கப்படுகிறது. இவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற எந்த திட்டமும் வழங்கப்படுவதில்லை என்கிற புகாரும் இருந்து வந்தது. கொரோனா காலக்கட்டத்தின் போது கூட, அக்ஷய் குமார் இப்படி ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு உதவ முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 2 நாட்களில் 3 சினிமா பிரபலங்கள் மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..
மேலும் படிக்க | பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









