மகள் திருமணத்திற்கு அர்ஜுன் கொடுத்த வரதட்சனை! ஆத்தாடி..இத்தனை கோடியா?

Aishwarya Arjun Umapathy Ramaiah Wedding Dowry Details : நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து, அவர் தன் மகளுக்கு கொடுத்த வரதட்சனை குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jun 20, 2024, 06:38 AM IST
  • ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம்!
  • அர்ஜுன் கொடுத்த சீதனம்..
  • எவ்வளவு தெரியுமா?
மகள் திருமணத்திற்கு அர்ஜுன் கொடுத்த வரதட்சனை! ஆத்தாடி..இத்தனை கோடியா? title=

Aishwarya Arjun Umapathy Ramaiah Wedding Dowry Details : தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் சமீபத்தில் கொண்டாடி முடித்த திருமணம், அர்ஜுன் மகள் மற்றும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவின் திருமணம்தான். சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தி வைக்கப்பட்ட இந்த திருமணத்தில் திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர்.

ஐஸ்வர்யா-உமாபதி ராமையா காதல்:

‘அக்ஷன் கிங்’ அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா, இதுவரை தமிழில் ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். ‘பட்டத்து யாணை’ என்ற அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக விஷால் நடித்திருப்பார். இது தவிர பிற மொழியிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். சினிமா வர்க்-அவுட் ஆகாமல் போக, படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். 

இதே போல திரையுலகிற்குள் நுழைந்தவர், உமாபதி ராமையா. பிரபல குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகனான இவர், தற்போது திரையுலகில் வளர்ந்து வரும் ஹீராேவாக இருக்கிறார். ஆனால், இவர் நடித்த படங்கள் எதுவும் சிறப்பாக செயல்படவில்லை. இவர்கள் இருவரும் சந்தித்து கொண்டது ‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் செட்டில்தான். 

அர்ஜுன் தொகுத்து வழங்கிய இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் தந்தையை பார்ப்பதற்காக மகள் ஐஸ்வர்யா வர, அங்கு உமாபதியை சந்தித்திருக்கிறார். அப்படியே இருவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் விரைவிலேயே கிரீன் சிக்னல் கொடுத்திருக்கின்றனர். 

பிரம்மாண்ட திருமணம்:

கடந்த ஆண்டு ஐஸ்வர்யாவிற்கும் உமாபதிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. அர்ஜுன் கட்டியுள்ள அனுமன் கோயிலில் நிச்சயதார்த்தம் நடைபெற, திருமணமோ மிகவும் பிரம்மாண்டமாக சென்னையில் நடைப்பெற்றது. இந்த திருமணத்திற்கும், பின்னர் நடைப்பெற்ற திருமண வரவேற்பிற்கும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் வருகை புரிந்தனர். 

மேலும் படிக்க | அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவின் திருமண புடவை ரகசியம்! இதில் இப்படியொரு கதையா?

வரதட்சனை..

நடிகர் அர்ஜுன், தன் மகளுக்கு அளித்துள்ள சீர் குறித்த தகவல்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. சீதனம் கொடுப்பதும் வாங்குவதும் அவரவர் விருப்பம் என்றாலும், அர்ஜுன் தனது மகளுக்காக எவ்வளவு சீதனம் கொடுத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் இருந்தனர். அவர், தன் மகளுக்காக கோடிக்கணக்கில் சீர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அர்ஜுனுக்கு சொந்தமாக போரூரில் பல நிலங்கள் இருப்பதாகவும் அதனால், தன் மகளுக்கு இது பாேன்ற சீதனம் கொடுப்பது பெரிய விஷயம் இல்லை என்றும் கூறப்படுகிறது. 

தனது மகளுக்காக அவர், கோடிக்கணக்கில் மதிப்பு கொண்ட ஆடம்பரமான சொகுசு பங்களாவை வழங்கியிருப்பதாகவும், கூடவே பல சவரன் நகைகளை வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு..

ஐஸ்வர்யா-உமாபதி திருமணம் நடைப்பெற்று முடிந்த சில நாட்களுக்கு பிறகுதான் திருமண வரவேற்பு நடந்தது. இதில் ரஜினிகாந்த், ஷாலினி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து இவர்களின் திருமணம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பும் நடைப்பெற்றது. இதில், நடிகர் தம்பி ராமையாவை ஐஸ்வர்யா “சார்” என்று குறிப்பிட்டார். இதைப்பார்த்த அர்ஜுன், உடனே “சார் இல்லை மாமா..” என்று திருத்தினார் இதையடுத்து அவரும் சிரித்துக்கொண்டே “மாமா” என்று கூறினார். பின்னர் இந்த திருமணத்திற்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

மேலும் படிக்க | Aishwarya Arjun : புது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News