அருள்நிதி மருத்துவமனையில் அனுமதி..முதல்வர் நலம் விசாரிப்பு! அவருக்கு என்னாச்சு?

Arulnithi Hospitalized : பிரபல நடிகர் அருள்நிதி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Nov 8, 2025, 11:27 AM IST
  • மருத்துவமனையில் அருள்நிதி
  • நேரில் சந்தித்த முதல்வர்
  • இப்போது எப்படியுள்ளார்?
அருள்நிதி மருத்துவமனையில் அனுமதி..முதல்வர் நலம் விசாரிப்பு! அவருக்கு என்னாச்சு?

Arulnithi Hospitalized : அரசியல் மற்றும் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், அருள்நிதி. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும் வலம் வரும் இவர், சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இவருக்கு என்ன ஆனது? இப்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

அருள்நிதி :

முன்னாள் முதல்வரும், மாபெரும் அரசியல் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் பேரன்தான் அருள்நிதி. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் தமிழரசுவின் மகனான இவர், தமிழில் வம்சம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்க, உடனே உதயன், மௌனகுரு என சில கவனிக்கத்தக்க படங்களில் நடித்தார்.

இவர் நடிப்பில் இதுவரை வெளியான டிமாண்டி காலனி, கே-13, இரவுக்கு ஆயிரம் கண்கள், திருவின் குரல் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு அவர் நடித்த டிமாண்டி காலனி 2 படம் நல்ல வெற்றியை பெற்றதை தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு அவர் நடித்த ராம்போ படம் வெளியானது. 

மருத்துவமனையில் அனுமதி!

அருள்நிதி, திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவரை, தற்போது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பார்த்து நலம் விசாரித்து வருகின்றனர்.

நலம் விசாரித்த முதல்வர்:

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருள்நிதியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிறகு, அருள்நிதியின் உடல்நிலை குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு காலில் என்ன பிரச்சனை இருந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிப்படையாக பேசுபவர்..!

வழக்கமாக திரையுலகில் இருக்கும் நடிகர்-நடிகைகள், தங்கள் இடத்தை சினிமாவில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக எதையும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். ஆனால், அருள்நிதி அப்படியில்லை. அனைத்தையும் ஓபனாக பேசுபவர். இவரது நேர்காணல் பலரை எண்டர்டெயின் செய்யும் வகையில் இருக்கும். இவர், விரைவில் உடல்நலன் பெற்று திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பலர் இணையத்தில் பேசி வருகின்றனர்.

மேலும் படிக்க | ராஜமெளலி படத்தில் கொடூர வில்லனாக பிருத்விராஜ்! போஸ்டர் வெளியானது..

மேலும் படிக்க | காதலருடன் சமந்தா..எப்படி கட்டிப்பிடிச்சிருக்காங்க பாருங்க! வைரல் போட்டோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News