)
Madhampatty Rangaraj Case Against Joy Crizildaa : ஜாய் கிரிஸில்டா-மாதம்பட்டி ரங்கராஜின் பிரச்சனை, கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வருகிறது. இதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
ஜாய் கிரிஸில்டா-மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை:
ஏற்கனவே ஸ்ருதி என்கிற பெண்ணை திருமணம் செய்து, 2 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார். இவர், தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கி விட்டு, இப்போது தன்னை கைவிட்டு விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.
விசாரித்ததில், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் ஆனதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தாங்கள் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார். மேலும், தனக்கு ஒரு முறை கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், 3 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இப்போது, இந்த குழந்தைக்கு தகப்பனான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னுடனான தொடர்பை மொத்தமாக கட் செய்து கொண்டதாகவும், அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவிலும், ரங்கராஜ் தனது கேட்டரிங் தொழிலையும் குக் வித் கோமாளி நடுவர் தொழிலையும் பார்த்து வந்தார்.
ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக வழக்கு:
ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து வெளியிட்டுள்ள பதிவுகளில் எல்லாம், #MadhampattyPakashala என்கிற அவரது கேட்ரிங் பிராண்டை குறிப்பிட்டுள்ளதாகவும், இது அவர்களின் தொழிலை பாதிக்கும் என்பதால் அந்த பதிவுகளை நீக்க வேண்டும் என்றும் அவரது நிறுவனத்தின் தரப்பில் ஜாய் கிரிஸில்டாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
12 கோடி இழப்பு!
தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிஸீல்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அவதூறாக பேசி வெளியிட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு கொடுத்துள்ளார்.
அதே போல, மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் மாதம்பட்டி பிரைவேட் லிமிட்., நிறுவனத்தை தொடர்புப்படுத்தி, ஜாய் கிரிஸில்டா பேசியதால் அந்த நிறுவனத்துக்கு 15 நாட்களில் ரூ.12.5 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் வேறு ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக கருத்து தெரிவிக்க விரும்பினால் அவரது பெயரை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று, மாதம்பட்டி தங்கவேலு நிறுவனம் வாதிட்டுள்ளது. இதற்கு, ஜாய் கிரிஸில்டா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வெறும் ரங்கராஜ் என்றால் யாருக்கும் தெரியாது என்றும், அவரை பாதுகாப்பதற்காக மாதம்பட்டி தங்கவேலு நிறுவனம் இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாக வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த விசாரணை!
வாதங்களை கேட்ட நீதிபதி, ஜாய் கிரிஸில்டா பேசியதால் நஷ்டம் ஏற்பட்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அவரது நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த வழக்குகளின் விசாரணை, வரும் செப்டம்பர் 24ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ