D 57 Movie With Unexpected Director : நடிகர் தனுஷ் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்து விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அவர் எதிர்பாராத ஒரு இயக்குனருடன் கைகோர்த்து இருக்கிறார்.

D 57 Movie With Unexpected Director : உள்ளூர் சினிமாவை தாண்டி உலக சினிமாவை தொட்டுவிட்ட நடிகர் தனுஷ். கோலிவுட் பாலிவுட் என கலக்கி வரும் அவர் பல மொழி படங்களில் தொடர்ந்து கமிட் ஆகியிருக்கிறார். தற்போது புது படத்திற்காக ஒரு எதிர்பாராத இயக்குனருடன் அவர் கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எதிர்பாராத கூட்டணி..
தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார் தனுஷ். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன பிரச்சனை இருந்தாலும் அதனை தொழில் வாழ்க்கையில் காட்டாத அவர், படங்களில் நடித்து வருவதோடு தொடர்ந்து படம் இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கிட்டத்தட்ட எட்டு படங்களுக்கும் மேல் கமிட் ஆகி இருக்கும் இவர், தற்போது ஒரு ஹிட் இயக்குனருடன் கைகோர்த்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை, லப்பர் பந்து படத்தை இயக்கி வெற்றி பெற்ற தமிழரசன் பச்சமுத்துதான் எனக் கூறப்படுகிறது. இவர் கடந்தாண்டு இயக்கிய அந்த படம், பட்டி தொட்டி எங்கும் மக்களின் வரவேற்பினை பெற்றது.
தனுஷ் 57வது படம்..
தமிழரசன் பச்சமுத்து மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் படம், அவரது 57வது படம் ஆகும். இந்த படத்திற்கான பேச்சு வார்த்தைகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஹிட் இயக்குநர் என்பதால் தனுஷுடன் அவர் இணையும் இந்த படமும் கண்டிப்பாக ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கதாநாயகி யார்?
தனுஷுக்கு ஜோடியாக நடித்த இந்த படத்தில் சாய் பல்லவி சைன் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே மாரி 2 திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். இந்த ஜோடி இப்போது மீண்டும் இணைய இருப்பது குறித்து ரசிகர்கள் இணையத்தில் பரவலாக பேசி வருகின்றனர்.
இயக்குனராகவும் கலக்கும் தனுஷ்..
நடிகர் தனுஷ் பா பாண்டி படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இந்த படம் ஓரளவிற்கு நல்ல வசூலையும் விமர்சனத்தையும் பெற்றது. இதுவே அவரைத் தொடர்ந்து சில வருடங்கள் கழித்து ராயன் படத்தை இயக்க வைத்தது. இதையடுத்து அவர், இட்லி கடை மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
இதில் இட்லி கடை படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து அருண் விஜய், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் தனது அக்கா மகனை தனுஷ் ஹீரோவாக களம் இறக்கி இருக்கிறார். தனுஷ் தான் இயக்கிய அனைத்து படங்களிலுமே நடித்திருக்கிறார். அதனால் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திலும் அவர் கேமியோ கதாபாத்திரத்தில் வந்திருப்பார் என கூறப்படுகிறது.
தொடர்ந்து படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்..
தமிழ் திரையுலகில் டாப் நட்சத்திரங்கள் கூட ஒரு வருடத்திற்கு ஒரு படம்தான் நடித்து வருகின்றனர். அதே டாப் நட்சத்திரமாக இருக்கும் தனுஷ், ஒரு பக்கம் தான் இயக்கும் படங்களில் பிசியாக இருந்தாலும், தன்னை வைத்து ஹீரோவாக இயக்குனர்கள் படம் எடுக்கையில் அதிலும் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் குபேரா. இது மட்டுமில்லாமல் இளையராஜாவின் பயோபிக்கிலும் நடிக்கிறார். இதையடுத்து மாரி செல்வராஜுடனும் ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.
அதிக எதிர்பார்ப்புள்ள படங்கள்..
தனுஷ் படம் என்றாலே இப்போது அதற்கு மவுசு கூடி இருக்கிறது. ஆனால் இவர் நடிப்பில் உருவாக இருக்கும் புதுப்பேட்டை2 மற்றும் வடசென்னை 2 ஆகிய படங்கள் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்தப் படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு அந்த படங்களின் இயக்குனர்கள் மனது வைத்தால்தான் உண்டு.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ