அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படத்தில் பாடல் பாடிய தனுஷ்!

Dhanush Sang A Song In Retta Thala Movie : அருண் விஜய் நடிப்பில்,  மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும், “ரெட்ட தல” படத்திற்காக முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

Written by - Yuvashree | Last Updated : Apr 8, 2025, 07:43 PM IST
  • அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல படம்!
  • பாடல் பாடிய தனுஷ்..
  • இட்லி கடை படத்திலும் இணைந்து நடிக்கின்றனர்..
அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படத்தில் பாடல் பாடிய தனுஷ்!

Dhanush Sang A Song In Retta Thala Movie : BTG Universal நிறுவனத்தின்  மூன்றாவது படைப்பாக,  முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில்,  மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும், “ரெட்ட தல” படத்திற்காக முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

Add Zee News as a Preferred Source

முன்னதாக நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க,  இருவர் கூட்டணியில் உருவாகும் “இட்லி கடை” படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் ரெட்ட தல படத்தில் இணைந்துள்ளது, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழித்தியுள்ளது. 

இசையமைப்பாளர் சாம் CS இசையில் உருவாகியுள்ள இந்த அழகான பாடலை தனுஷ் பாடியுள்ளார். இப்பாடலுக்கான படப்பிடிப்பு  படக்குழு வெளிநாட்டில் பல இடங்களில் மிகபிரம்மாண்டமாக படமாக்கியுள்ளனர். விரைவில் இப்பாடல் லிரிகல் வீடியோ வடிவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

இரண்டு முன்னணி நட்சத்திர நடிகர்கள் எந்த வித ஈகோவும் இல்லாமல்,  இணைந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. 

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில்,  அருண் விஜய் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரிக்கிறார்.  தமிழ் திரையுலகில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M. மனோஜ் பெனோ, தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று திரைப்படங்களின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார்.

மேலும் படிக்க | வடிவேலு ரிஜெக்ட் செய்த படம்! விஜய் ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட் ஆனது..எது தெரியுமா?

மேலும் படிக்க | அட்லீ X அல்லு அர்ஜுன் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? ‘இந்த’ 37 வயது நடிகைதான்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News