தன்னை விட 2 வயது மூத்த நடிகையை காதலிக்கும் துருவ் விக்ரம்? லீக் ஆன கிஸ்ஸிங் போட்டோ..

Dhruv Vikram Dating Anupama Parameswaran : பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், தற்போது ஒரு நடிகையை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Apr 13, 2025, 12:56 PM IST
  • துருவ் விக்ரம் காதலிக்கும் நடிகை!
  • இவரை விட 2 வயது மூத்தவர்..
  • யார் தெரியுமா?
தன்னை விட 2 வயது மூத்த நடிகையை காதலிக்கும் துருவ் விக்ரம்? லீக் ஆன கிஸ்ஸிங் போட்டோ..

Dhruv Vikram Dating Anupama Parameswaran : தமிழ் திரையுலகில் வாரிசு நடிகராக வலம் வருபவர், துருவ் விக்ரம். நடிகர் விக்ரமின் இரண்டாவது பிள்ளையான இவர், கோலிவுட்டில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கிறார். இவர் தற்போது ஒரு நடிகையை டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

துருவ் விக்ரம்:

விக்ரமின் மகன் துருவ், பாலாவின் இயக்கத்தில் உருவான வர்மா படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தார். இது, அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீ-மேக் ஆகும். ஆனால், இந்த படத்தை சரியாக எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, அதே கதையை வேறு இயக்குநரை வைத்து ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் எடுத்தனர். இந்த படம் பெரிய ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து துருவ் விக்ரம், இன்னும் பெரிய நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மகான் திரைப்படத்தில் விக்ரமுக்கு மகனாக நடித்த பிறகு வேறு எந்த படத்திலும் அவர் கமிட் ஆகவில்லை. இதைத்தொடர்ந்து, அவர் மாரி செல்வராஜ் இயக்கி வரும் பைசன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

‘இந்த’ நடிகையை டேட்டிங் செய்கிறாரா?

பொதுவாக, ஒரு படத்தில் இரண்டு நடிகர்-நடிகைகள் சேர்ந்து நடிக்கின்றனர் எனும் போது, அவர்களுக்குள் காதல் மலர்வது மிகவும் சகஜம். இப்போது, பைசன் திரைப்படத்திலும் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். அனைவரும் பாடல் கேட்கும் ஸ்பாட்டிஃபை தளத்தில், ‘ப்ளூ மூன்’ என்ற பெயரில் ஒரு ப்ளே லிஸ்டை வைத்திருந்தார் அனுபமா. அதில், இருவர் முத்தம் கொடுத்து கொள்வது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இது பார்ப்பதற்கு அனுபமா-துருவ் போல இருந்தது. இதனை பார்த்த சிலர், ரெடிட் தளத்தில் இந்த போட்டோவை வைரலாக்க ஆரம்பித்தனர். உடனே, அந்த ப்ளே-லிஸ்ட் ப்ரைவேட் ஆக்கப்பட்டது. இது, அவர்கள் இருவரும் பகிர்ந்து பாடல் கேட்கும் ப்ளே லிஸ்ட் என யூகிக்கப்பட்டுள்ளது.

Anupama

துருவ் விக்ரமுக்கு, தற்போது 27 வயதாகிறது. அனுபமாவிற்கு, 29 வயதாகிறது. இவர், தன்னை விட வயது அதிகமான பெண்ணை டேட்டிங் செய்யும் விவரமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

உண்மையா?

பல சமயங்களில், இப்படி நடிகர்-நடிகைகள் குறித்து பரவும் டேட்டிங் தகவல்கள் உண்மையாக இருக்கலாம் அல்லது வெறும் வதந்தியாக மட்டும் இருக்கலாம். இவர்கள் காதலில் இருக்கின்றனர் என்பதற்கு, இந்த ப்ளே லிஸ்ட் போட்டோவை தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை. இதனால், இது குறித்து பேசி வரும் இன்னும் சிலர் அவர்களின் வரவிருக்கும் படத்திற்கான விளம்பரமாக கூட இது இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

இதுவரை சர்ச்சைகளில் சிக்காதவர்கள்…

வழக்கமாக, எந்த நடிகர்-நடிகைகள் திரையுலகில் பிரபலமாக இருந்தாலும் அவர்களை சுற்றி இது போன்ற டேட்டிங் வதந்திகள் பரவுவது சுலபம். ஆனால், அனுபமாவோ துருவ்வோ இதுவரை இது போன்ற வதந்திகள் சிக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 2 வருடத்தில் 3000 கோடி வசூல் படங்களை கொடுத்த நடிகை! யார் தெரியுமா?

மேலும் படிக்க | 5 நிமிட பாடலுக்கு 5 கோடி சம்பளம் வாங்கிய நடிகை! யாரு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News