ஜனநாயகன் படத்தில் இணைந்த புது நடிகர்! விஜய்யுடன் 25 வருடம் கழித்து நடிக்கிறார்..

Nizhalgal Ravi To Reunite With Vijay : நடிகர் விஜய் தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் ஒரு பிரபல நடிகர் சேர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Mar 30, 2025, 05:10 PM IST
  • விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் பிரபல நடிகர்!
  • 25 வருடங்கள் கழித்து இணைகிறார்..
  • முன்னர் குஷி படத்தில் நடித்திருக்கிறார்!
ஜனநாயகன் படத்தில் இணைந்த புது நடிகர்! விஜய்யுடன் 25 வருடம் கழித்து நடிக்கிறார்..

Nizhalgal Ravi To Reunite With Vijay : தமிழ் திரை உலகின் முக்கிய நடிகராக வளம் வரும் விஜய், விரைவில் அரசியல் களத்தில் முழு நீளமாக இறங்க இருக்கிறார். அதற்கு முன்னர் இவர் கடைசியாக நடித்த வரும் படம், ஜன நாயகன். இந்தப் படத்தில் புதிதாக இணைந்துள்ள ஒரு நடிகர் குறித்து தகவல் தான் தற்போது இணையத்தில் வரலாறு வருகிறது. 

Add Zee News as a Preferred Source

ஜன நாயகன் திரைப்படம்: 

ஜன நாயகன் திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இது விஜயுடன் இவர் இணையும் முதல் படமாகும். தவெக கட்சியை தொடங்கிய பிறகு விஜய் நடிக்கும் எந்த படம்தான் இவருக்கு கடைசி படமாகும். இந்த படத்தில் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இது இவர் விஜியுடன் இணையும் இரண்டாவது படமாகும். ஏற்கனவே இவர்கள் பீஸ்ட் படத்தில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். பூஜாவுடன் சேர்த்து, மமீதா பைஜூ, பாபி டியோல், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங்  கடந்த அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. 

படத்தில் இணைந்த பிரபல நடிகர்..!

ஜன நாயகன் படம், விஜய்க்கு கடைசி படமாக இருப்பதால் இதில் பல சர்ப்ரைஸ் அம்சங்கள் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இதில் புதிதாக ஒரு நடிகர் சமீபத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது. அந்த நடிகர் வேறு யாருமில்லை, நிழல்கள் ரவிதான். இவர் விஜயுடன் வெகு சில படங்களிலேயே நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலமாக 25 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் மீண்டும் ஸ்கிரீனில் தோன்ற இருக்கிறார்.

Vijay Nizhalgal Ravi

தந்தையாக நடிக்கிறாரா? 

கடைசியாக விஜயுடன் நிழல்கள் ரவி நடித்த படம், குஷி. எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு வெளியான இந்த படம், அப்போது பெரிய ஹிட் அடித்தது. இதில் நிழல்கள் ரவி விஜய்க்கு தந்தையாக நடித்திருந்தார். ஜாலியான இவரது தந்தை கதாபாத்திரம் பலரது மனங்களையும் கவர்ந்தது. தற்போது 25 வருடங்கள் கழித்து, அதேபோல ஜன நாயகன் படத்திலும் இவர் விஜய்க்கு தந்தையாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கண்டிப்பாக இவர்கள் இருவரின் நடிப்பையும் திரையரங்கில் என்ஜாய் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலீஸ் எப்போது?

ஜன நாயகன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அப்போதே படம் 2025-ன் அக்டோபர் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியானது. ஆனால், சமீபத்தில் படத்தின் புதிய போஸ்டரு ம், புதிய அறிவிப்பு தேதியும் வெளியானது. அதன்படி, படம் வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கதை என்ன?

ஜன நாயகன் திரைப்படம், விஜய்யின் அரசயில் என்ட்ரிக்கு முந்தைய படமாக இருப்பதால் கண்டிப்பாக இது ஒரு நல்ல பொலிட்டிக்கள் த்ரில்லராக இருக்கும் என கூறப்படுகிறது. இடையில் இந்த படம் பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீ-மேக் என்ற தகவலும் வெளியானது. ஆனால், அந்த படத்திலிருக்கும் சில காட்சிகளுக்கான உரிமைகளை மட்டும் ஜன நாயகன் படக்குழு வாங்கியிருப்பதாகவும், இது அந்த கதை இல்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இதனால், ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்

மேலும் படிக்க | கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாகும் 35 ரொமாண்டிக் ஹீரோ! யார் தெரியுமா?

மேலும் படிக்க | தாயாக நடித்தவரை காதலித்த நடிகர்..2 முறை திருமணம்..இப்போ சிங்கிளா இருக்காரு-யார் அவர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News