)
Robo Shankar Hospitalized : தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக விளங்குகிளார், ரோபோ சங்கர். இவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் உடல்நிலைக்கு என்ன ஆனது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதி!
நடிகர் ரோபோ சங்கர், தொடர்ந்து படங்களில் நடித்தும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டும் வருகிறார். அப்படி, சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்திருப்பதாக கூறப்படுகிறது. அங்கு, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உடலில் என்ன பிரச்சனை?
ரோபோ சங்கர் சென்னையில் படப்பிடிப்பில் இருந்துள்ளார். அப்போது, அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மஞ்சள் காமாலை நோய்:
நடிகர் ரோபோ சங்கர், பார்க்கவே திடகாத்திரமாக பிரம்மாண்டமாக இருப்பார். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் உடல் எடை மெலிந்து, ஆளே மாறிப்போய் காணப்பட்டார். அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்ததுதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு சமீபத்தில்தான் உடல் நலம் தேறியிருந்தார். மீண்டும் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார், தனது வழக்கமான வேலைகளை மீண்டும் தொடங்கினார். ஆனால், இப்போது மீண்டும் இப்படி உடல் நிலை குன்றியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரோபோ சங்கர்:
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிமிக்கிரி செய்து, நகைச்சுவை பர்ஃபாமன்ஸ் செய்து மக்களை கவர்ந்தவர் ரோபோ சங்கர். பின்னர் படிப்படியாக உயர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தனுஷின் மாரி திரைப்படத்தில் ‘சனிக்கிழமை’ எனும் கதாப்பாத்தித்தில் நடித்திருந்தார். இது அவருக்கு பெரும் புகழை தேடி தந்தது. இதையடுத்து, தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில், “அன்னிக்கு காலைல ஆறு மணி.” என்கிற டைலாக்கை பேசி பிரபலமானார்.
மீடியா குடும்பம்!
நடிகர் ரோபாே சங்கரின் குடும்பம் மொத்தமும் மீடியாவில் பிரபலமானவர்களாக இருக்கின்றனர். மகள் இந்திரஜா, சங்கர் விஜய்யுடன் பிகில் படத்தில் ‘பாண்டியம்மா’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து வைரலானார். அதன் பிறகு, இவருக்கு அவரது சொந்த தாய் மாமனுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இவர்கள் இப்போது, சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களாக இருக்கின்றனர். இப்படி, ரோபோ சங்கரின் மொத்த குடும்பமே மீடியாவில் இருக்கும் குடும்பமாக இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ