குடும்பத்துடன் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்! தந்தை மரணம்..பிறர் நிலை என்ன?

Shine Tom Chacko Father Dies In Road Accident : பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை, சாலை விபத்தி உயிரிழந்திருக்கிறார். குடும்பத்தை சேர்ந்த பிறர், மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Written by - Yuvashree | Last Updated : Jun 6, 2025, 10:53 AM IST
  • விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்
  • உயிரிழந்த தந்தை..
  • குடும்பத்தினர் நிலை என்ன..?
குடும்பத்துடன் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்! தந்தை மரணம்..பிறர் நிலை என்ன?

Shine Tom Chacko Father Dies In Road Accident : தமிழ்நாட்டிலும் பிரபலமான மலையாள நடிகராக இருக்கிறார், ஷைன் டாம் சாக்கோ. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரும் இவரது குடும்பத்தினரும் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியிருக்கின்றனர். இந்த சம்பவம் நடந்தது எப்படி? எங்கு விபத்து நடந்தது? முழு விவரம் இதோ!

Add Zee News as a Preferred Source

விபத்து!

கேரளாவைச் சேர்ந்த திரைப்பட நடிகர் சாக்கோ தனது குடும்பத்தினர்களுடன் காரில் பெங்களூருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் தருமபுரி - ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலையில் பாலக்கோடு அடுத்த பாறையூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. 

இதில் நடிகர் சாக்கோவின் தந்தை சிபி சகோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நடிகர் சாக்கோ, தாய், சகோதரர் மூவரும் காயம் அடைந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த நடிகரின் மேலாளருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு காவல் துறையினர் நடிகரின் தந்தை உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

காயமடைந்த நடிகர் சாக்கோ மற்றும் குடும்பத்தினர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை பொருள் பயன்படுத்தியதற்காக கைது!

கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி, கொச்சியில் இருக்குமொரு விடுதியில் சாக்கோ தங்கியிருந்தார். அப்போது அங்கு போதை பொருள் சோதனை நடந்தது. அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற சாக்கோ, 3வது மாடியில் இருந்து நீச்சல் குளத்தில் குதித்து தப்பிச்சென்றார்.

அதன் பிறகு அவரே கொச்சி போலீஸாரின் விசாரணைக்கு வந்தார். 4 மணி நேரம் நடந்த விசாரணையில் அவர் போதை பொருள் பயன்படுத்தியதற்காகவும் அதன் ஆதாரங்களை அழித்ததற்காகவும் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து, சினிமாவில் இருந்து விலகியிருந்தார். தற்போது குடும்பத்தினருடன் பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த கோர விபத்தானது நிகழ்ந்திருக்கிறது.

ஷைன் டாம் சாக்கோ, நடிகை வின்சி அலோசியஸ் என்ப்வரிடம், சூத்ரவாக்யம் எனும் படத்தின் படப்பிடிப்பில் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு நடிகை அபர்னா ஜானும் வின்சியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதற்கு ஷைன் டாம் சாக்கோ மன்னிப்பு கோரினார்.

சாக்கோ நடித்த தமிழ் படங்கள்:

ஷைன் டாம் சாக்கோ, விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சமீபத்தில் வெளியான அஜித் படமான குட் பேட் அக்லி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் படிக்க | அஜித் பட நடிகர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு! ஓட்டலில் இருந்து தப்பியோடும் சிசிடிவி காட்சிகள்..

மேலும் படிக்க | நிச்சயத்துடன் நின்று போன பிரபல நடிகரின் திருமணம்!! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News