Silambarasan Vetrimaaran Movie 3 Celebrities Cameo : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக இருக்கும் சிலம்பரசனும், ஸ்டார் இயக்குநராக திகழும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைய இருக்கின்றனர். இதில், முக்கியமான 3 பிரபலங்கள் கேமியோ கதாப்பாத்திரத்தில் இணைகின்றனர். அவர்கள் யார் தெரியுமா?
சிம்பு X வெற்றிமாறன் படம்:
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பல படங்கள் வெளியாக இருக்கிறது. அதே சமயத்தில், சில எதிர்பாராத கூட்டணிகளும் ஒன்று சேர்ந்து படத்தை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில், ரசிகர்கள் எதிர்பார்க்காமல் ஒன்று சேர்ந்ததுதான் சிலம்பரசன்Xவெற்றிமாறன் கூட்டணி. இது, சிம்புவின் 49வது படமாகும். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், படத்தின் வேலைகள் ஆரம்பித்து விட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படம் ஒன்றும் இணையத்தில் லீக் ஆனது.
வைரலாகும் போட்டோ:
வெற்றிமாறன்-சிம்புவின் படப்பிடிப்பு தள போட்டோவில், சிம்பு கட்டம் போட்ட சட்டை மற்றும் லுங்கி கட்டிக்கொண்டு நிற்கிறார். அவருக்கு அருகில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நிற்கிறார். சிம்பு, நெல்சன் உள்பட அந்த செட்டில் இருக்கும் அனைவரும் வெற்றிமாறன் பேசுவதை கேட்டுக்கொண்டு நிற்பது போல அந்த புகைப்படத்தில் இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
#VetriMaaran - #SilambarasanTR have started the promo shoot for #STR49.#Nelson also present at the shooting spot! This project is moving faster than expected. pic.twitter.com/NOxtWCfSaC
— Vishal (@vishalviews_) June 17, 2025
கேமியோ கதாப்பாத்திரம்?
சிம்பு படத்தில் நெல்சன் திலீப்குமார் இருப்பதை பார்த்த ரசிகர்கள், இவர் ஒரு வேளை இந்த படத்தில் கேமியாே கதாப்பாத்திரத்தில் வருகிறாராே என்று இணையத்தில் கேள்விகளை கேட்டு வருகின்றனர். மேலும், இப்படம் குறித்த இன்னொரு அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது. சிம்புவின் இந்த 49வது படத்தில், நெல்சன் மட்டுமல்ல, இன்னும் 2 பிரபலங்கள் கூட கேமியோ கதாப்பாத்திரங்களில் வருகின்றனராம்.
யார் அந்த பிரபலங்கள்?
சிம்பு X வெற்றிமாறனின் திரைப்படத்தில், நெல்சன் கெளரவ தோற்றத்தில் வருவதோடு, இன்னும் 2 நடிகர்களும் இதில் கேமியோ ரோலில் தோன்ற இருக்கின்றனராம். அவர்கள் வேறு யாருமில்லை, நடிகர்கள் மணிகண்டனும் கெவினும்தான்.
காதலும் கடந்து போகும் படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி, இன்று குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என வரிசையாக ஹிட் படத்தில் நடித்த ஹீரோவாக இருக்கிறார் மணிகண்டன். சரவணன் மீனாட்சி மற்றும் பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் கெவின். இவர் கடந்த ஆண்டு ஸ்டார் மற்றும் ப்ளடி பெக்கர் போன்ற படங்களில் நடித்திருந்தார். இரண்டுமே பெரிதாக ஹிட் ஆகவில்லை.
நெல்சனுடன் சேர்ந்து, கவினும் மணிகண்டனும் இந்த படத்தில் நடிக்கின்றனரா இல்லையா என்பது குறித்து இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில், இவர்கள் ஏதேனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. நெல்சன் தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இவர் சிம்பு மற்றும் வெற்றிமாறனுக்கு நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வெற்றிமாறனின் அடுத்த படம் வாடிவாசல் இல்லையா? வெளியான புதிய அறிவிப்பு!
மேலும் படிக்க | வட சென்னை 2 வருமா வராதா? வெற்றிமாறன் சொன்ன பதில் என்னன்னு நீங்களே பாருங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ