Vishal To Get Married With Sai Dhanshika : தமிழ் திரையுலகில், பிரபல நடிகையாக வலம் வருபவர் விஷால். 40களை கடந்தும் இன்னும் சிங்கிளாக சுற்றி வரும் இவர், தற்போது பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
40களிலும் சிங்கிளாக விஷால்!
வழக்கமாக சினிமாவை சேர்ந்த நடிகர்கள், தங்களின் திருமணத்தை தாமதமாக நடத்திக் கொள்வர். நடிகைகளாக இருந்தாலும் இதே கதை தான். இப்போது தமிழ் சினிமாவை பொருத்தவரை பலர் தங்களது 40 களை கடந்தும் சிங்கிளாக இருக்கின்றனர். திரிஷா, சிலம்பரசன், பிரபாஸ், அனுஷ்கா என பலர் இன்னும் தனது வாழ்க்கை துணைக்காக வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர். அப்படி, தனது 47 வது வயதிலும் சிங்கிளாக இருப்பவர் விஷால்.
இவர், இளமையாக இருந்தபோது இவருக்கும் சில குறிப்பிட்ட நடிகைகளுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறது. அப்படி தகவல்கள் பரவிய நடிகைகளின் பெயர்களில், வரலட்சுமி சரத்குமார் மற்றும் லட்சுமி மேனன் ஆகியோரின் பெயர்களும் அடக்கம். ஆனால் அந்த காதல் உறவுகள் ஏதோ ஒரு கட்டத்தில் முடிந்து விட்டன. காதலித்தவர்களும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
திருமணம் நிறுத்தம்..
நடிகர் விஷால் சில ஆண்டுகளுக்கு முன்பு அனிஷா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருந்தார். அவர் ஒரு மருத்துவர். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் 2019ஆம் ஆண்டில் முடிந்த நிலையில் திருமணம் செய்ய சில மாதங்களே இருந்தபோது திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து எங்கும் வெளியில் கூறப்படவில்லை.
சில வாரங்களுக்கு முன்பு கூட நடிகை அபிநயா ஒரு பேட்டியில், தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாக கூறினார். உடனே அது விஷால் உடன்தான் என பலர் நினைத்துக் கொண்டனர். ஆனால், அவர் தனது நீண்ட நாள் காதலரே சமீபத்தில் கரம் பிடித்தார்.
விஷாலுக்கு திருமணமா?
நடிகர் விஷால் தற்போது தன்னைவிட 12 வயது குறைந்த, 35 வயது நடிகையான சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. முன்னர் நடிகர் விஷால், நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். ஆனால் அவர் அப்படி கூறியே பத்து வருடங்கள் கடந்து விட்டது. இப்போது அந்த கட்டிடம் முடிக்கப்படும் தருவாயில் இருக்கிறது. இந்த சமயத்தில் அவர் மதுரையில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது, அனைத்து கேள்வி கேட்கப்பட்டது. அதுக்கு விஷால், “ஆம் நான் ஒருவரை சந்தித்து விட்டேன். அது காதல் திருமணமாக இருக்கும். இது குறித்த பிற அறிவிப்புகளை பின்னர் வெளியிடுவேன்” என்று கூறியிருந்தார். அந்த மணப்பெண் வேறு யாரும் இல்லை சாய் தன்ஷிகாதான் என்று தற்போது கிசுகிசுக்கப்படுகிறது. இவரை பேராண்மை, கபாலி போன பல படங்களில் பார்த்திருப்போம். இவர் விஷாலை திருமணம் செய்து கொள்வது குறித்து அதிகாரப்பூர் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் நிலை எப்படியுள்ளது?
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில், உடலை கட்டுமஸ்தாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொண்டுள்ள நடிகர்களுள் ஒருவர், விஷால். ஆனால், சமீப காலமாக அவர் மிகவும் மெல்லிய தேகத்துடன் காணப்படுகிறார். மதகஜராஜா பட விழாவில், அவர் கை நடுக்கத்துடனும், குரலில் தடுமாற்றத்துடனும் பேசியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே போல, சில நாட்களுக்கு முன்னர் மிஸ் கூவாகம் அழகி போட்டியில் சிறப்பு விருந்தினரா கலந்து கொண்ட இவர், மயங்கி விழுந்தார். இப்போது, அவர் உடல்நிலை சகஜமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மேடையிலேயே மயங்கி விழுந்த நடிகர் விஷால்! அவருக்கு என்ன பிரச்சனை? வைரல் வீடியோ…
மேலும் படிக்க | பிரபல நடிகருடன் உறவில் ஆர்த்தி ரவி? உண்மை வெளிவருவது எப்போது? பிரபலம் சொன்ன தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ