Vishnu Vishal Jwala Gutta Blessed With Daughter : பிரபல தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு, 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அவர் மகிழ்ச்சியாக வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

Vishnu Vishal Jwala Gutta Blessed With Daughter : கோலிவுட் திரையுலகில், முக்கிய நடிகராக வலம் வருபவர், விஷ்ணு விஷால். இவர் பேட்மிண்டன் வீராங்கணை ஜுவாலா குட்டாவை 2021ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், தனக்கு 2வது குழந்தை பிறந்துள்ளதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாக வெளியிட்டிருக்கிறார்.
விவாகரத்தில் முடிந்த திருமணம்:
வெகு சில படங்களிலேயே நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நடிகராக விளங்குபவர் விஷ்ணு விஷால். இவருக்கு 40 வயது ஆகிறது. இவருக்கு 2010ஆம் ஆண்டு, ரஜினி நட்ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இது காதல் திருமணம் என கூறப்படுகிறது. ஆனால், இந்த திருமண வாழ்க்கை, 2018ஆம் ஆண்டில் விவாகரத்தில் முடிந்தது. இதில், விஷ்ணு விஷாலுக்கும், ரஜினிக்கும் ஆர்யன் என்கிற மகன் இருக்கிறார்.
விஷ்ணு விஷாலுக்கு 2வது குழந்தை:
விஷ்ணு விஷால், 2021ஆம் ஆண்டு பேட்மிண்டன் வீராங்கணையான ஜுவாலா குட்டாவை காதல் திருமணம் செய்தார். இவர்கள், அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே டேட்டிங் செய்து வந்தனர். இவர்கள், தங்களுக்கு தற்போது ஒரு மகள் பிறந்திருக்கும் விவரத்தை அறிவித்து இருக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில், தாங்களுக்கு மகள் பிறந்திருப்பதாகவும், மகன் ஆர்யன் இப்போது அண்ணன் ஆகி விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர். அதே போல, தங்களுக்கு இது 4வது ஆண்டு திருமண நாள் என்றும், அதே நாளில் கடவுளால் தங்களுக்கு பெண் குழந்தை பரிசாக வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் விஷ்ணு விஷால். கூடவே தனது மனைவி ஜுவாலாவையும் டேக் செய்திருக்கிறார்.
பிரபலங்கள் வாழ்த்து:
விஷ்ணு விஷாலின் இந்த பதிவிற்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஐஸ்வர்யா ராஜேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், நிக்கி கல்ரானி உள்ளிட்டோர் வாழ்த்துகளையும் ஹார்ட் இமோஜிக்களையும் பறக்க விட்டுள்ளனர்.
விஷ்ணு விஷாலின் படங்கள்:
நடிகர் விஷ்ணு விஷால், முதலில் தான் ஒரு நடிகர் ஆக வேண்டும் என்ற கனவே இல்லாமல் இருந்தவர். இவர், முதலில் கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஆக வேண்டும் என நினைத்திருக்கிறார். இதனால், சில போட்டிகளிலும் விளையாடினார். ஆனால், காலில் ஏற்பட்ட ஒரு காயம் காரணமாக அவரால் அந்த கனவை அடைய முடியாமல் போனது. இதையடுத்து வீட்டில் ரெஸ்ட் எடுத்து கொண்டிருந்த அவர், படம் பார்க்க தொடங்கியிருக்கிறார். அப்போதுதான், தான் ஒரு நடிகர் ஆகலாமே என்கிற எண்ணம் அவருக்குள் தோன்றியிருக்கிறது.
இவரது உண்மையான பெயர், விஷால்தான். ஆனால், திரையுலகிற்கு வந்த பிறகு அதனை விஷ்ணு விஷால் என மாற்றிக்கொண்டார். இவரை முதலில் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் கவனித்திருப்போம். அதில், ஹீரோவாக வந்த இவர் கடைசியில் உயிரிழந்து விடுவார். தொடர்ந்து இவர் நடித்த குள்ளநரி கூட்டம், இன்று நேற்று நாளை போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது.
ராட்சசன் படம் இன்னும் இவரை உச்சத்தில் தூக்கி விட, தொடர்ந்து கட்டா குஸ்தி படம் மூலமாகவும் கிராமத்து இளைஞனாக வெற்றி பெற்றார். இப்போது, அவர் மூன்று படங்களில் நடித்திருக்கிறார். இவை இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ