Keerthy Suresh To Pair With Ashok Selvan : தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர், திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக ஒரு படத்தில் சைன் செய்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
புதுப்பொண்ணு கீர்த்தி..
நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த டிசம்பர் மாதம் தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம், கோவாவில் நடைப்பெற்றது. முதலில் தமிழ் முறைப்படி திருமணம் நடக்க, பின்னர் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைப்பெற்றது. கல்யாணத்திற்கு முன்பே, நடிகை கீர்த்தி பேபி ஜான் படத்தில் நடித்திருந்தார். திருமணமாகி, 10 நாட்களுக்குள்ளாகவே இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். இல்லற வாழ்வில் இணைந்த பின்பு ஜாலியாக இருக்கும் அவர், இப்போது புதிதாக ஒரு படத்தில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
யார் அந்த ஹீரோ?
நடிகை கீர்த்தி, தனது திருமணத்திற்கு பிறகு ஒரு படத்தில் கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா? பிரபல ஹீரோ அசோக் செல்வன்தான். 35 வயதாகும் இவர், முதலில் சூது கவ்வும் படம் மூலம் அறிமுகமானார். இவர், கடைசியாக “எமக்கு தொழில் ராெமான்ஸ்” என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது, மணி ரத்னம் இயக்கி வரும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அத்துடன், ஸ்டார் பட நாயகியான பிரீத்தி முகுந்தனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தியுடன் இவர் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஜோடி நல்லாயிருக்குமா?
நடிகர் அசோக் செல்வன், இதுவரை தேர்ந்தெடுத்து நடித்த படங்களில், பெரும்பாலானவை காதல் படங்களாக இருக்கின்றன. அதில் நித்தம் ஒரு வானம், மன்மத லீலை, தீனி உள்ளிட்ட படங்களும் அடக்கம். கீர்த்தியும் ஆன்-ஸ்கிரீனில் நன்றாக ரொமான்ஸ் செய்யக்கூடியவர். இதனால், இந்த ஜோடி திரையில் பார்க்க நன்றாக இருப்பர் என்று கூறப்படுகிறது.
கீர்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் படங்கள்:
நடிகை கீர்த்தி, கடைசியாக தமிழில் ரகு தாத்தா படத்தில் நடித்திருந்தார். இந்த படம், தியேட்டரில் வெளியான போது பெரிதாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெறவில்லை. ஆனால், ஓடிடியில் வெளியான பின்பு ரசிகர்களை கவர்ந்தது. இதற்கு பின்பு, அவர் ரிவால்வர் ரீடா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி வருவதாக கூறப்படுகிறது. அதே போல, கண்ணி வெடி என்ற இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் அவருக்கு கோலிவுட்டில் கம்-பேக் படங்களாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | அயன் படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தவர்-சூர்யா இல்லை! வேறு யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









