)
Lakshmi Menon Involved In Kidnapping Case : தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லக்ஷமி மேனன். இப்போது இவர் பெரிதாக சினிமா படங்களில் நடிப்பதில்லை. இருப்பினும் அவ்வப்போது ஏதேனும் சில திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இப்போது அவர் பெரும் சிக்கலில் சிக்கியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
நடிகை லக்ஷமி மேனன் கேரளாவை சேர்ந்தவர். இப்போது ஒரு கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று, காரில் சென்று கொண்டிருட்ந்த ஐடி ஊழியர் ஒருவரை கடத்திய விவகாரத்தில் 3 பேர் கும்பலுடன் லக்ஷ்மி மேனனுக்கு தொடர்பு உடையாதாக கூறப்படுகிறது. இதன் வீடியோ ஆதாரமும் சிக்கியுள்ளதாம். அதில், அந்த காரை வழிமறித்து ஐடி ஊழியரிடம் சிலர் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதும், அவர்களுடன் லக்ஷி மேனன் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீஸார் தெரிவித்திருக்கும் தகவலின் படி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை இதுவரை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்களின் பெயர் மிதுன், அனீஷ் மற்றும் சனமோல். அதிகாரிகள், லக்ஷ்மி மேனனும் இவர்களுடன் சம்பவத்தின் போது இருந்ததாக சொல்கின்றனர். இப்போது லக்ஷமி மேனன் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
சம்பவத்தன்று ஒரு மதுபான விடுதியில், இரண்டு குழுக்களிடையே சண்டை மாண்டுள்ளது. விவாதமாக ஆரம்பித்த இந்த சண்டை, பின்பு கைகலப்பாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட ஐடி ஊழியர் காரில் சென்ற போது அவரை கடத்தி, அடித்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சனமோல் மற்றும் அந்த குழுவை சேர்ந்த இன்னொருவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
இப்போது எங்கே இருக்கிறார்?
நடிகை லக்ஷமி மேனன், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, அவர் இருப்பிடம் அல்லது இப்போது எங்கே இருக்கிறார் என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இருப்பினும் அவர் தற்போது தலைமறைவாக இருக்கும் தகவல் மட்டுமே வெளியாகி இருக்கிறது. இவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபல தென்னிந்திய நடிகை..!
நடிகை லக்ஷமி மேனன், மலையாள திரையுலகை சேர்ந்தவராக இருந்தாலும், பெரும்பாலும் தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இவர் தமிழில் சுந்தரபாண்டியன் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு கும்கி, குட்டிப்புலி, பாண்டிய நாடு உள்ளிட்ட படங்களில் நடித்தார். மிக இளம் வயதில் நடிக்க வந்த இவர், இதுவரை விஷால், கார்த்தி, அஜித், ரவி மோகன் உள்ளிட்ட பலரது படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் சந்திரமுகி 2வில் நடித்திருந்தார். சப்தம் படத்திலும் இவரது நடிப்பு குறித்து பேசப்பட்டது.
ஆரம்பத்தில் இவரது மார்கெட் உச்சத்தில் இருந்தது. ஆனால் எந்த காரணத்தினாலோ அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தற்போது இவருக்கு 29 வயதாகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ