3வது கணவரை பிரிந்த பிரபல நடிகை! அதுவும் திருமணமான ஒரே ஆண்டில்..ரசிகர்கள் அதிர்ச்சி..

Meera Vasudevan Third Marriage Divorce : பிரபல நடிகை மீரா வாசுதேவன், தனது மூன்றாவது கணவரை பிரிந்ததாக அறிவித்துள்ளார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Nov 17, 2025, 04:56 PM IST
  • மூன்றாவது கணவரை பிரிந்த நடிகை!
  • அதுவும் திருமணம் ஆன ஒரே வருடத்தில்...
  • அவரே வெளியிட்ட பதிவு
3வது கணவரை பிரிந்த பிரபல நடிகை! அதுவும் திருமணமான ஒரே ஆண்டில்..ரசிகர்கள் அதிர்ச்சி..

Meera Vasudevan Third Marriage Divorce : மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர், மீரா வாசுதேவன். இவர், கடந்த ஆண்டு மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது ஓராண்டில் அந்த திருமண உறவில் இருந்து தான் விலகியதாக அறிவித்திருக்கிறார்.

Add Zee News as a Preferred Source

மலையாள நடிகை மீரா வாசுதேவனை, ‘அடங்க மறு’ படத்தில் ரவி மோகனுக்கு அண்ணி கதாப்பாத்திரத்தில் பார்த்திருப்போம். இந்த படத்தில் இவருக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும், தன் கண்களாலேயே எக்ஸ்பிரஷன் கொடுத்து நன்றாக நடித்திருப்பார். இந்த படம் மட்டுமல்ல, மீரா வாசுதேவன் இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமன்றி, சீரியல்களிலும் முக்கிய ரோல்களில் வந்துள்ளார்.

மூன்றாவது திருமணம்:

நடிகை மீரா வாசுதேவன், கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம், விபின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மீரா, ‘குடும்ப விளக்கு’ எனும் மலையாள தொடரில் நடித்து வந்தார். இந்த தொடரின் ஒளிப்பதிவாளரான விபினிற்கும், இவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் கடந்த ஆண்டு திருணம் செய்து கொண்டனர். கோவையில் நடந்த இவர்களின் திருமணத்தில் வெகு சில உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.

மூன்றாவதும் விவாகரத்து..

விபின்-மீரா திருமணம் நடந்த போது, அது குறித்து ஒட்டுமொத்த திரையுலகமும் பேசியது. காரணம், இது மீராவிற்கு மூன்றாவது திருமணம் என்பதால். இதைத்தாண்டி, விபின் மீராவை விட ஆறு வயது இளையவரும் கூட. இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியான சமயத்தில், பலர் இந்த ஜோடியை வாழ்த்த, ஒரு சிலரோ மீரா குறித்து ஏளனமாக பேசி வந்தனர்.

மீரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்தை பகிர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தான் சிங்கிளாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். அது மட்டுமன்றி, இப்போதுதான் வாழ்க்கையின் மிகவும் அழகான கட்டத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார். இது, ரசிகர்களை ஷாக் ஆக்கியிருக்கிறது.

முதல் இரண்டு திருமணங்கள்..

தன் கணவருடன் சேர்ந்து கடந்த சில மாதங்களாகவே எந்த புகைப்படத்தையும் இவர் பதிவிடாமல் இருந்ததால் பலருக்கும் இவரது விவாகரத்து குறித்து சந்தேகம் எழுந்தது. இப்போது அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இவர் திருமணம் செய்து இருந்த இரண்டு பேர் யார் தெரியுமா?

மீரா வாசுதேவன், கடந்த 2005ஆம் ஆண்டு விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்தார். இவர்கள், 2010ஆம் ஆண்டு வரை திருமண உறவில் இருந்துள்ளனர். அதன் பிறகு, 2012ஆம் ஆண்டில் பிரபல வில்லன் நடிகர் ஜான் கொக்கேனை மீரா காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணமும் 2016ஆம் ஆண்டுடன் விவாகரத்தில் முடிந்துள்ளது. இதையடுத்து, 2024ல், தனது 42வது வயதில் விபினை மணந்த மீரா வாசுதேவன், இப்போது அவரையும் பிரிந்திருக்கிறார்.

விமர்சனங்களை எதிர்கொள்ளும் மீரா!

இந்தியாவை பொருத்தவரை, ஒன்றிற்கும் மேற்பட்ட திருமணங்களானது, இன்றளவும் சகஜமான விஷயமாக பார்க்கப்படவில்லை. அதிலும், ஒரு பெண் தன் கணவரை பிரிந்து தன் வாழ்க்கையையோ, இன்னொரு வாழ்க்கை துணையையோ தேர்ந்தெடுத்தாலோ, அது குறித்து அவதூறாக பேசும் வாய்களை எப்போதும் மூடவே முடியாது. மீரா விஷயத்திலும் இதுதான் தற்போது நடந்து வருகிறது. இவர், தற்போது தனது நான்காவது கணவரை தேர்ந்தெடுத்து வருவதாக ஒரு சிலர் இணையத்தில் இவரை கலாய்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க | 30 வயதை கடந்து..தாமதமாக திருமணம் செய்துகொண்ட 7 தமிழ் நடிகைகள்! முழு லிஸ்ட் இதோ..

மேலும் படிக்க | 42 வயதில் 3வது திருமணம் செய்த பிரபல நடிகை! அதுவும் 6 வயது இளையவரை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News