Nayanthara To Pair Up With 69 Year Old Actor : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமான இவர், இப்போது இந்தியாவின் டாப் நடிகைகளுள் ஒருவர். இவர் நடிக்கும் புது படத்தில் அவருக்கு ஜோடியக 69 வயது நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நயன்தாரா:
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. கேரளாவில் மாடல் அழகியாகவும், தொகுப்பாளராகவும் இருந்த இவர், அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவருக்கு கஜினி மற்றும் சந்திரமுகி திரைப்படம் ஏற்றத்தை கொடுத்தது. அது எல்லாம் அவருக்கு வெறும் ஆரம்பம் மட்டும்தான். அதன் பிறகு அவரது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை.
டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தவர்..
நடிகை நயன்தாரா, தமிழில் டாப் ஹீரோக்களாக இருக்கும் ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைத்து டாப் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். அது மட்டுமல்ல, தெலுங்கிலும் வெங்கடேஷ், மகேஷ் பாபு உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக சில படங்களில் நடித்திருக்கிறார். இப்போது, ஒரு பிரபல நடிகருக்கு அவர் ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
69 வயது நடிகருக்கு ஜோடி..
நயன்தாரா, தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறாராம். அந்த நடிகர், தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவர். அது மட்டுமல்ல, அவரது குடும்பமே இப்போது தெலுங்கு திரையுலகை ஆளும் குடும்பமாக இருக்கிறது. அவர் வேறு யாருமில்லை. 69 வயதான நடிகர் சிரஞ்சீவிதான்.
இந்த படத்தை அனில் ரவிபுடி என்ற இயக்குநர் இயக்க இருப்பதகவும், இதன் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கதாநாயகியாக நடிக்க வைக்க, பல நடிகைகள் குறித்து விவாதித்ததாகவும் கடைசியில் நயன்தாராவை செலக்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பளம் இவ்வளவா?
சிரஞ்சீவியின் இந்த படத்தின் கதையை கேட்டு, நயன்தாரா அதில் நடிக்க சம்மதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னர் கொஞ்சம் குறைவாக சம்பளம் வாங்கி வந்த நயன், இப்போது இந்த படத்திற்காக சுமார் ரூ.18 கோடியை சம்பளமாக கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த அமவுண்டை கேட்டு, தயாரிப்பாளரே ஷாக் ஆகி விட்டாராம். ரூ.10 கோடியாக இருந்த தனது சம்பளத்தை, இந்த படத்தின் மூலம் ஒரே அடியாக நயன்தாரா உயர்த்தியிருப்பது குறித்து திரையுலககினர் கிசுகிசுத்து வருகின்றனர்.
நயன்தாரா நடிக்கும் படங்கள்..
நடிகை நயன்தாராவிற்கு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏறுமுகத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதவனுடன் அவர் சேர்ந்து நடித்த டெஸ்ட் திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றிய பிறகு, அவருக்கு மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் ஏற்றத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. அதே போல கன்னடத்திலும் அவர் டாக்ஸிக் படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ், ஹாய் உள்ளிட்ட படங்கள் தற்போது ப்ரொடக்ஷன் பணியில் உள்ளன.
தனுஷுடனான சண்டை, அது நீதிமன்றம் வரை சென்றது, விக்னேஷ் சிவன் தொடர்ந்து ட்ரோல் மெட்டீரியல் ஆனது என கடந்த ஆண்டு முழுக்க இந்த ஸ்டார் ஜோடி ட்ரெண்டிங்கில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நயன்தாராவுக்கு பிரபுதேவா போட்ட 3 கண்டீஷன்! பிரேக்-அப் ஆக இதுதான் காரணமாம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









