)
Trisha Mechanical Elephant Gaja Price : தமிழ் திரையுலகில் டாப் நடிகையாக விளங்குபவர் நடிகை த்ரிஷா. இவர், சமீபத்தில் செய்துள்ள தானம், மக்களை திரும்பி பார்க்க செய்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
நடிகை த்ரிஷாவின் அன்பளிப்பு!
நடிகை த்ரிஷா, மிருகங்கள் மீது அதிக அன்பு கொண்டவர். இவர் ஆசையாக வளர்த்து வந்த ஜோரோ என்ற நாய், சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தது. அதை நினைத்து அவர் அதிக சோகத்தில் இருந்தது அனைவருக்கும் தெரியும். இப்போது அவர், விருதுநகர் அருப்புக்கோட்டையில் இருக்கும் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோவிலுக்கு தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து இயந்திர யானையை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார். ஆழியூரில் இருக்கும் கோயிலான ஸ்ரீ அஷ்டபுஜ அதிசேஷ வாராஹி அம்மன் கோயிலுக்கும் ஒரு யானையை அவர் பரிசளித்திருப்பதாக கூறப்படுகிறது.
‘கஜா’ என்று அந்த யானைக்கு பெயரிடப்பட்டுள்ளது. உண்மையான யானை போலவே இருக்கும் இந்த இயந்திர யானையை அவர் விலங்குகள் நல அமைப்புடன் சேர்ந்து கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அன்னதானம்:
யானை பரிசளிப்பு நிகழ்வின் போது, கோயிலில் இருந்த பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அன்னதானமும் ஸ்பெஷலானதாகும். “Vegan Free” உணவுகளை அவர் அன்னதானமாக கொடுத்திருக்கிறார். அதாவது, இந்த உணவுகளில் வெறும் சைவ உணவு, அதுவும் விலங்குகளை வைத்து எந்த வகையிலும் தயாரிக்கப்படாத உணவுகள் மட்டுமே இதில் இருக்குமாம்.
ஒரே நாளில் இப்படி இயந்திர யானை பரிசு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் போன்ற நற்செயல்களை செய்துள்ள த்ரிஷாவை பலரும் பாராட்டி வருகின்றனர். அது மட்டுமன்றி, இந்த யானை கொடுக்கப்பட்ட கோயில்களில் பக்தர்களும் மக்களும் இதற்கு நல்ல வரவேற்பினை அளித்துள்ளனர்.
கஜா யானையின் விலை:
கஜா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த யானை, பார்க்க உண்மையான யானை போலவே இருக்கிறது. இந்த யானை, 3 மீட்டர் உயரம் கொண்டதாம். அது மட்டுமன்றி இது 800 கிலோ எடை கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த யானையின் விலை, ரூ.8 லட்சம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
ஒரு வேள இருக்குமோ..?
நடிகை த்ரிஷா, நல்ல மனம் படைத்தவர் என்றாலும் அவர் அடிக்கடி தொண்டு செய்வதை ரசிகர்கள் பெரும்பாலும் பார்த்ததில்லை. சமீபத்தில்தான், விஜய்யின் பிறந்தநாள் முடிந்தது. இவரது தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடியில் 2 யானைகளும், வாகை பூவும் இருக்கும். இப்போது த்ரிஷா, கோயில்களுக்கு 2 இயந்திர யானைகளை வழங்கி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் சிலர், விஜய் பிறந்தநாளை முன்னிட்டுதான் அவர் இந்த நன்கொடையை வழங்கி இருப்பாரோ என்று கேட்டு வருகின்றனர்.
த்ரிஷா ஏற்படுத்திய சர்ச்சை:
நடிகை த்ரிஷா, சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதில் விஜய், கைகளில் த்ரிஷாவின் புதிய செல்ல நாய் ‘Izzy’-ஐ தூக்கி கொஞ்சிக்கொண்டு இருந்தார். லியோ படத்தின் முத்தக்காட்சியில் இருந்து இவர்களுக்குள் நட்பை தாண்டிய உறவு இருப்பதாக சர்ச்சையை கிளப்பியது. கடந்த ஆண்டும் இருவரும் லிஃப்டில் எடுத்த செல்ஃபியை பதிவிட்டு, த்ரிஷா பரபரப்பை கிளப்பினார்.
ஏற்கனவே விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் ஒன்றாக இல்லை என்று சொல்லப்படும் நிலையில் த்ரிஷா இப்படி பதிவிடுவது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் விஜய்யும், படங்களில் பிசியாக நடித்து வரும் த்ரிஷாவும் இது போன்ற சர்ச்சைகளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ