OG Sambavam பாடலில் இதை கவனித்தீர்களா? சூப்பர் மேட்டரா இருக்கே..

Good Bad Ugly First Single OG Sambavam Song : அஜித் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் ஓஜி சம்பவம் பாடல், தற்போது வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் தீயாய் இருப்பதாக ரசிகர்கள் கருத்து.

Written by - Yuvashree | Last Updated : Mar 18, 2025, 06:01 PM IST
  • குட் பேட் அக்லி பாடல் வெளியானது..
  • ஆதிக் ரவிச்சந்திரன் பாடியிருக்கிறார்..
  • பாடலில் கவனிக்க வேண்டியவை..
OG Sambavam பாடலில் இதை கவனித்தீர்களா? சூப்பர் மேட்டரா இருக்கே..

Good Bad Ugly First Single OG Sambavam Song : கோலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம், குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகரும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்டை எடுத்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரமோ வீடியோ நேற்று வெளியான நிலையில், முழு பாடல் வெளியாகியிருக்கிறது.

Add Zee News as a Preferred Source

OG Sambavam பாடல்:

ஜிவி பிரகாஷ் குமார் இந்த பாடலை பாடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனே இதில் பாடுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதில், கோரஸ் பாடியிருப்பதோடு மட்டுமன்றி, இடையில் "AK” என்று இவர் கத்தவும் செய்கிறார்.

பாடலின் லிரிக்ஸ் தீயாக இருப்பதாக ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதை கவனிச்சீங்களா?

குட் பேட் அக்லி படத்தின் ஓஜி சம்பவம் பாடலில், அஜித்தின் குரல் இடையிடையே வருவதை கவனித்திருப்பீர்கள். இதில் அவர் “அது” என சொல்வதும் இடம் பெற்றுள்ளது. இது, அவரது சிக்னேச்சர் ஸ்டைல் டைலாக் ஆகும். இதை கவனித்து, பாடலில் அதையும் இணைத்திருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இது, ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. இதை கவனித்த பலர் “இது சூப்பர் மேட்டரா இருக்கே..” என்று கூறி வருகின்றனர்.

இந்த படமாவது காப்பாத்தனும்..

அஜித் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான எந்த படங்களுமே சரியாக ஓடவில்லை. ஒரு சில படங்கள் வசூல் ரீதியாக ஹிட் ஆனாலும், விமர்சனத்தில் சொதப்பி விடுகிறது. நல்ல விமர்சனத்தை பெறும் படங்கள், வசூலில் சொதப்பி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது துணிவு படம் வெளியானது. இந்த படம் ரிலீஸான கையுடன் தொடங்கிய படம், விடாமுயற்சி. இந்த படம், ஆரம்பித்ததில் இருந்தே பிரச்சனைதான். ஷூட்டிங் ஆரம்பிப்பதில் தாமதம், படப்பிடிப்பில் விபத்து, இழுத்தடித்த வேலைகள் என இதில் பலவித குழப்பங்கள் நிலவியது. இருப்பினும் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பலவித எதிர்பார்ப்புகளுடன் இதனை பார்க்க பலர் தியேட்டருக்கு சென்றனர். ஆனால், அவர்கள் அனைவருமே பெரும் ஏமாற்றத்துடன்தான் திரும்பி வந்தனர்.

விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வரவேற்பையும் வசூலையும் பெறாமல் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், அடுத்ததாக வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் குட் பேட் அக்லி திரைப்படமாவது நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்கிற பதற்றத்தில் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். படம் வெளியான பிறகுதான் உண்மை நிலை தெரியும். 

மேலும் படிக்க | குட் பேட் அக்லி: அப்டேட் வீடியோவில் ‘இந்த’ வீட்டை கவனிச்சீங்களா? இதில் ஒரு சீக்ரெட் இருக்கு..

மேலும் படிக்க | அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் சிம்பு? வெளியான தரமான அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News