Bigg Boss Vikraman Harassment In Lady Get Up : பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் விக்ரமன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய உறுப்பினரான இவர், சமூக சேவைகளிலும் அரசியலும் ஆக்டிவாக இருப்பார். பிக்பாஸில் இருந்த போது இவர் கூறிய “அறம் வெல்லும்” எனும் வாசகம் பயங்கர வைரலானது. இவர் டைட்டிலை வெல்லாதது பலருக்கு வருத்ததை கொடுத்தாலும், பிக்பாஸை தாண்டியும் தனிப்பட்ட வாழ்விலும் இவருக்கு நிறைய ஆதரவுகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இவர் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
சர்ச்சையில் சிக்கிய விக்ரமன்:
பிக் பாஸ் முடிந்தபிறகு விக்ரமன் ஒரு சர்ச்சையில் சிக்கினார். தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து அவர் மீது புகார் கூறினார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட புகார் தற்போது விசாரணையில் இருக்கிறது. இந்த பிரச்சனை சுமூகமாவதற்குள், இப்போது இன்னொரு சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார். பெண் வேடமிட்டு அவர் ஆண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும் பெண் உடையில் அவர் சாலையில் ஓடும் வீடியோவும் வைரல் ஆனது. உடனே பலரும் விக்ரமனை விளாசி பதிவுகள் எழுதினர்.
விளக்கம் கொடுத்த விக்ரமன்:
விக்ரமன் இந்த சர்ச்சை பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த வீடியோவை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் கூறி இருக்கிறார்.
சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அறத்தின்படி செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்த பாலிமர் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி.
— Vikraman R (@RVikraman) March 9, 2025
அதனால் இது சினிமா ஷூட்டிங் வீடியோ தான் என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் அதற்குள் அந்த வீடியோ வைரலாகிவிட்டது. அதோடு முதலில் அந்த வீடியோவை வைத்து செய்தி வெளியிட சேனல் ஒன்று அதை நீக்கியும் விட்டது. தற்போது விக்ரமனின் மனைவி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அதில் கேமராவே இல்லை ஆனால் ஷூட்டிங் என சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, ஷீட் செல்லும் முன் டெஸ்டுக்காக எடுக்கப்பட்ட வீடியோ அது என்று அவர் கூறியுள்ளார்.

அதோடு வேண்டுமென்றே யாரோ அவதூறு பரப்ப வேண்டும் என்று அந்த குறிப்பிட்ட வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் விக்ரமன் மனைவி தெரிவித்துள்ளார்.
ராஜு முருகனின் மனைவி அளித்த புகார்..
பிரபல இயக்குநர் ராஜு முருகனும் அவரது மனைவி ஹேமா சின்ஹாவும், விக்ரமன் தங்கியிருக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருக்கின்றனர். இந்த நிலையில், தாங்கள் வசிக்கும் பகுதியில் பாலியல் ரீதியான பல குற்றச்சம்பவங்கள் நடைப்பெற்று வருவதாகவும் இது குறித்து குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்ததாகவும் கூறியிருக்கிறார்.
குடியிருப்புசங்க நிர்வாகிகள் தொடர்ந்து பராமரிப்பு தொகை கேட்டு டார்ச்சர் செய்ததாக்வும், குப்பைகளை அப்புறப்படுத்தாமல் இருப்பதாகவும் அவர் புகார் கொடுத்துள்ளார். இந்த பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மேலும் படிக்க | Vikraman Marriage: பிக் பாஸ் புகழ் விக்ரமனுக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?
மேலும் படிக்க | பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









