Bigg Boss 8 Fame Actress To Participate In CWC 6: தமிழ் நாட்டில் அதிக ரசிகர்களை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் போட்டியாளராக, பிக் பாஸ் பிரபலம் ஒருவர் பங்கேற்க வைக்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 6:
தமிழ் தொலைக்காட்சிகளில் வித்தியாசமாக தொடங்கப்பட்ட சமையல் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. சமையல் தெரிந்த ஒரு பிரபலம், சமையல் தெரியாத ஒரு பிரபலம் இவர்கள் இருவரும் சேர்ந்து சமையல் மேடையில் செய்யும் சேட்டைகள் தான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன், ரசிகர்களை கவர்ந்ததோடு அதற்கு அடுத்து எடுக்கப்பட்ட சீசன்களை நல்ல மாற்றங்கள் கொண்டு வந்து எடுத்தனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த ஐந்தாவது சீசன், பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியில் இத்தனை சீசன்களாக நடுவர்கள் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட், சில பர்சனல் காரணங்களுக்காக இதிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். இதை அடுத்து நடிகரும் சமையல் கலை வல்லுநருமான மாதம்பட்டி ரங்கராஜ் புது நடுராக அறிமுகமானார்.
பிக் பாஸ் பிரபலம்..
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், சமையல் செய்யும் பிரபலம் அல்லது கோமாளியாக வரும் பிரபலங்களில் சில பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களாக இருந்திருப்பர். அந்த வகையில், நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர் ஒருவர், இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை, நடிகையும் மாடலுமான சௌந்தர்யாதான்.
மக்கள் மனதை கவர்ந்தவர்…
பிக் பாஸில் இடம் பெற்றிருந்த போட்டியாளர்கள் அனைவரையும் மக்கள் அனைவருக்கும் பிடித்து விடாது. ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்த்து பெரும்பாலானோருக்கு பேவரட்டாக இருந்த ஒரே போட்டியாளர் சௌந்தர்யா. இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது செய்த விஷயங்கள் மக்கள் மத்தியில் அவ்வப்போது வீடியோவாக வைரல் ஆனது. இதனால் இறுதியில் ரன்னர் அப் பட்டமும் இவருக்கு தான் கிடைத்தது.

சௌந்தர்யாவால், அவ்வப்பாேது பிக்பாஸ் ஒளிபரப்பான நேரத்தில் சேனலின் ரேட்டிங்கும் அதிகரித்தது. இவர், பெரிதாக யாரிடமும் தேவயில்லாமல் சண்டை போட்டதில்லை. ஆனால், இவர் போட்ட சண்டைகள் அனைத்தும் மக்கள் மத்தியில் பரவலான பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகள்:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த சீசன் சர்ச்சைக்கு பெயர் போனதாக இருந்தது. மணிமேகலை பாதியிலேயே தாெகுப்பாளர் பதிவியில் இருந்து விலகியது, அவரை அட்டாக் செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்தது, பல கோமாளிகளை இடையிலேயே நிறுத்தியது என்று பல சர்ச்சைகள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்தது. இது, அடுத்த சீசனிலும் தொடராமல் இருந்தால் சரிதான்.
மேலும் படிக்க | குக் வித் கோமாளி மணிமேகலை-பிரியங்கா சம்பள விவரம்! இருவரில் யாருக்கு அதிக சம்பளம்?
மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டிலேயே முத்துக்குமரனுக்கு தான் கம்மி சம்பளம்! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









