குக் வித் கோமாளி 6 ப்ரோமோ வீடியோ.. அதே மொக்க கோமாளிகள்..

Cooku With Comali 6: தற்போது வெளியாகியுள்ள குக் வித் கோமாளி 6 இன் ப்ரோமோ வீடியோவில் எந்த போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 15, 2025, 10:15 AM IST
  • குக் வித் கோமாளி ஆறாவது சீசன்.
  • இந்த சீசனில் யார் தொகுப்பாளர்?
  • பல சலாசாளப்புடன் ஐந்தாவது சீசன் கடந்து சென்றது.
குக் வித் கோமாளி 6 ப்ரோமோ வீடியோ.. அதே மொக்க கோமாளிகள்..

Cooku With Comali 6 Promo Video: தற்போது வெளியாகியுள்ள குக் வித் கோமாளி 6 இன் ப்ரோமோ வீடியோவில் எந்த போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அந்த போட்டியாளர்கள் யார் யார் என்கிற தகவலை இங்கே காணலாம்.

Add Zee News as a Preferred Source

குக் வித் கோமாளி சீசன் 6: 
தமிழ் தொலைக்காட்சிகளில் வித்தியாசமாக தொடங்கப்பட்ட சமையல் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி (Cooku With Comali). இந்த நிகழ்ச்சி கடந்த 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, மாபெரும் வெற்றி நிகழ்ச்சியானது. இதில் சிறப்பு என்னவென்றால் மற்ற சமையல் நிகழ்ச்சிகளை போன்று இல்லாமல் இதில், சமையல் தெரிந்த ஒரு பிரபலம், சமையல் தெரியாத ஒரு பிரபலம் இவர்கள் இருவரும் சேர்ந்து சமையல் மேடையில் செய்யும் சேட்டைகள் தான் நிகழ்ச்சியின் ஹைலைடாகும். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன், ரசிகர்களை கவர்ந்தததை அடுத்து எடுக்கப்பட்ட சீசன்களை நல்ல மாற்றங்கள் கொண்டு வந்து எடுத்தனர். 

எனினும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த ஐந்தாவது சீசனில் மட்டும், பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியில் இத்தனை சீசன்களாக நடுவர்கள் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட், சில பர்சனல் காரணங்களுக்காக இதிலிருந்து முதலில் விலகினார். அவரை அடுத்து நடிகரும் சமையல் கலை வல்லுநருமான மாதம்பட்டி ரங்கராஜ் புது நடுராக அறிமுகமானார். அதை தொடர்ந்து நிகழ்ச்சி முடின் தருவாயில் பிரியங்கா மணிமேகாலைக்கு இடையே நடந்த பிரச்சனையால், ஷோவின் ஆங்கரான மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இப்படி பல சலாசாளப்புடன் தான் இந்த ஐந்தாவது சீசன் கடந்து சென்றது.

குக் வித் கோமாளி ஆறாவது சீசன்: 
இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளியின் ரசிகர்கள் எப்போது ஆறாவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்ப்போடு இருந்தனர். அதன் படி தற்போது குக் வித் கோமாளி ஆறாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் இன்று வந்துள்ளது. அந்த வகையில் குக் வித் கோமாளி (CWC) ஆறாவது சீசனை ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த ஐந்து சீசனில் இருந்த அதே கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்க உள்ளனர். ஆக மொத்தம் இந்த சீசனிலும் அதே காமெடி .. அதே அரைச்ச மாவு என்பது போல் தெரிகிறது. இதோ பாருங்கள் ப்ரோமோ வீடியோ.

இந்த சீசனில் யார் தொகுப்பாளர்?
இதனிடையே ஐந்து சீசனில் இருந்த தர்ஷன் தான் இந்த முறையும் தொகுப்பாளராக இருக்கப் போகிறார். மேலும் இவருடன் இந்த சீசனில் யார் வரப்போகிறார்கள் என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. அதனால் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் படிக்க | சூரியுடன் மோதும் சந்தானம்! ஒரே நாளில் வெளியாகும் 2 படங்கள்!

மேலும் படிக்க | OTT-யில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படங்கள்.. எந்த தமிழ் படம் முதல் இடத்தில் இருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News