)
Coolie OTT Release Prime Video : ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக இருக்கிறது கூலி. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல், இதோ.
கூலி திரைப்படம்:
ரஜினிகாந்த் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம், கூலி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்ற இந்த படம், உலகளவில் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
ஓடிடி ரிலீஸ்:
ஓடிடி தளங்களின் வருகை பெருகி விட்டதால், தற்போது எந்த படம் வெளியானாலும் அதன் ஓடிடி ரைட்ஸ் விற்கப்பட்ட பிறகுதான், படம் வெளியாகிறது. அப்படித்தான் கூலி திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ப்ரைம் வீடியோ நிறுவனம் பெற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
get ready to vibe with the saga of Deva, Simon, and Dahaa CoolieOnPrime, Sep 11@rajinikanth @sunpictures @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja pic.twitter.com/Erjtef2o0C
— prime video IN (@PrimeVideoIN) September 4, 2025
படம், வரும் செப்டம்பர் 11ஆம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இருப்பினும், இந்த படத்திற்கு தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ஸ்கிரீன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் முக்கியமான படங்கள் வெளியாக இருப்பதாலும், இரண்டு மலையாள படங்கள் திரையரங்குகளில் ஓடி வருவதாலும் கூலி படத்தின் வசூலில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வசூல் எவ்வளவு?
எந்த பெரிய ஸ்டார்களின் படமாக இருந்தாலும், கதை நன்றாக இருந்தால் மட்டுமே ஓடும் என்கிற நிலை, தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால், விஜய்-ரஜினி போன்ற நட்சத்திரங்களுக்கு மட்டும் அது விதிவிலக்கு. இவர்கள் படம் சுமாராக இருந்தால் கூட, ரசிகர் கூட்டத்தால் ஓரளவு நல்ல வசூலை பெற்று விடுகிறது. கூலி படம் வந்த நாளில் இருந்து, ரசிகர்கள் மத்தியில் நெகடிவ் விமர்சனங்களை பெற்றதாக இருக்கிறது. இருப்பினும் படம் சில நாட்களுக்கு முன்பு, ரூ.500 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது. ரூ.400 கோடியை தாண்டியதை அறிவித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், அதன் பிறகான வசூல் விவரம் என்ன என்பதை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ