Atlee Next Movie Heroine : இந்திய படங்களில் நடித்து பல ஆண்டுகள் ஆகி விட்டாலும் எப்போதும் பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்ற நடிகையாக விளங்குபவர், இந்த 42 வயது நாயகி. இவர், தற்பாேது அட்லீயின் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அட்லீ இயக்கும் படம்!
தமிழ் இயக்குநர் அட்லீ, 5 படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும், அந்த ஐந்தையும் ஹிட்டாக்கிய திறமைக்காரர். தமிழில் விஜய்யை வைத்து 3 படங்களை எடுத்த பிறகு இந்திக்கு சென்ற இவர், அங்கும் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வடக்கில் உள்ளவர்களை வாய் பிளக்க வைத்தார். அட்லீ, சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தார். ஆனால், இந்த படத்தின் பணிகள் பேச்சு வார்த்தையுடன் நின்று போனது. தற்போது இந்த கதையில்தான் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய படத்தில் பிரியங்கா சோப்ரா:
அந்த நடிகை வேறு யாருமில்லை, பிரிங்கா சோப்ராதான். இவர், முதன் முதலில் அறிமுகமானதே விஜய் நடித்த ‘தமிழன்’ படம் மூலமாகத்தான். இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் நுழைந்து, அங்கு கொடிக்கட்டி பறந்தார்.
பிரபல பாலிவுட் நடிகையாக விளங்கிய பிரியங்கா சாேப்ராவிற்கு சில காரணங்களால் இந்தி பட மார்கெட் ஏறாமல் போனது. இதையடுத்து, ஹாலிவுட்டில் களமிறங்கிய இவர் அங்கும் சில படங்களிலும் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் இப்போது, மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக SSMB 29 என்ற திரைப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை, பாகுபலி இயக்குநர் ராஜமெளலி இயக்குகிறார். இந்த படத்திற்கான லுக் டெஸ்ட் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் கலந்து கொள்ள பிரியங்காவும் இந்தியவிற்கு வந்திருந்தார். இது குறித்த போட்டோக்களும் இணையத்தில் வைரலானது.
மகேஷ் பாபுவுக்கும், ராஜமெளலிக்கும் ஏற்கனவே இந்தியாவில் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர்களை தாண்டி, சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம், இரண்டு பாகங்களாக எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த படம்..
பிரியங்கா சோப்ரா, மகேஷ் பாபுவுடனான படத்திற்கு பிறகு திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அவர் அடுத்ததாக எந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.
அந்த 42 வயது நடிகர் வேறு யாருமில்லை, அல்லு அர்ஜுன்தான். 2021ல் வெளியான புஷ்பா திரைப்படம் பான்-இந்திய நடிகராக மாறிய இவர், அதன் பிறகு கமிட் ஆனது அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும்தான். கடந்த ஆண்டு வெளியாகியிருந்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் மாபெறும் ஹிட் அடித்தது. இந்த படம் மொத்தம் ரூ.1,700 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்தது. தற்போது, அவரது அடுத்த படத்தில் நடிக்க வைக்க பிரியங்கா சோப்ராவிடம் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தனுஷுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்.. யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









