வட சென்னை 2 கன்ஃபார்ம்! ஆனா ஹீரோ தனுஷ் இல்லை..அவருக்கு பதில் நடிப்பவர் யார் தெரியுமா?

Manikandan To Replace Dhanush In Vada Chennai 2 : வெற்றிமாறன் இயக்கத்தில் 2018-ல் வெளியான படம், வட சென்னை. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : Mar 13, 2025, 12:05 PM IST
  • வடசென்னை 2 படம் கன்ஃபார்ம்..
  • ஹீரோ தனுஷ் இல்லை..
  • அவருக்கு பதில் யார் தெரியுமா?
வட சென்னை 2 கன்ஃபார்ம்! ஆனா ஹீரோ தனுஷ் இல்லை..அவருக்கு பதில் நடிப்பவர் யார் தெரியுமா? title=

Manikandan To Replace Dhanush In Vada Chennai 2  : தமிழில் வெளியான முக்கியமான படங்களுள் ஒன்று, வட சென்னை 2. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் எப்போது வெற்றிமாறனிடம் கேட்கப்படும் ஒன்று. சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கூட, இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இந்த நிலையில், இப்படம் குறித்த இன்னொரு முக்கிய தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.

வடசென்னை 2:

2018ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை 2 திரைப்படம், அந்த ஆண்டின் கவனம் ஈர்த்த பெரிய ஹிட் படமாக அமைந்தது. ராஜன், அன்பு, குணா உள்ளிட்ட பெயர்கள் படத்தின் கேரக்டர்கள் என்பதை தாண்டி, சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஐக்கானாகவே மாறி விட்டது.

கேங்க்ஸ்டர் டிராமா என்றாலும், காதல், காமெடி, ஆக்ஷன் கலந்த கதையாக இருந்ததால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் தியேட்டர் பக்கம் இழுத்தது. பல நாட்கள் திரையரங்குகளில் ஓடிய நிலையில், இப்படம் சுமார் ரூ.61 கோடி வரை கலெக்ட் செய்தது. இந்த படம் முடியும் போது, அதில் 2ஆம் பாகத்திற்கான ஹிண்ட் இருந்தது. ஆனால், அந்த இரண்டாம் பாகத்திற்கான வேலைகள்தான் இன்னும் தொடங்கிய பாடில்லை.

படத்தின் இயக்குநர் வெற்றி மாறனை எங்கு பார்க்க நேரிட்டாலும், ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி “எப்போ சார் வட சென்னை 2 அப்டேட் குடுப்பீங்க?” என்பதுதான். அதற்கு வெற்றிறமாறனும் சிரித்துக்கொண்டே “விரைவில் வரும்” என்று பதில் சொல்வார். ஆனால் இதற்கிடையில் திரையுலகில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து பேசும் சில இணையதள பக்கங்கள் புதிவிதமான தகவல்களை பரப்பும். அப்படிப்பட்ட ஒரு தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷுக்கு பதில் இவரா?

வட சென்னை 2 படத்தை பொறுத்தவரை அதில் வரும் அனைத்துமே வலுவான கதாப்பாத்திரங்கள்தான். ஆனால் தனுஷின் ‘அன்பு’ மற்றும் அமீரின் ‘ராஜன்’ கேரக்டர்கள் மிக வலிமையானவை. இந்த நிலையில், இதன் இரண்டாம் பாகத்தில் இந்த கேரக்டரில் தனுஷ் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக மணிகண்டன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. மணிகண்டன் குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருப்பவர். இவர் பெரிய ஹீரோவாக வருவதற்கு கூட வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

மேலும் இந்த படத்தை கார்த்திகேயன் இயக்க போவதாகவும், வெற்றிமாறன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது, இணையத்தில் பரவும் தகவலே அன்றி, இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

Vada Chennai 2

கதைக்களம் எப்படி இருக்கும்?

வட சென்னை 2 படத்தில், அன்பு-க்கு அடுத்து அவனது மகன் அவன் இடத்தை பிடிப்பது போலவும், இதுவும் ஒரு கேங்க்ஸ்டர் டிராமாவாக தொடரும் என்றும் கூறப்படுகிறது. எனவே, இதன் கதைக்களம் முன்னர் எடுக்கப்பட்ட படத்தை விட வித்தியாசமாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சம்பவமா? ஆப்பா?

வட சென்னை 2 படம் குறித்து இணையத்தில் தகவல்கள் வைரலாவதை தொடர்ந்து, ரசிகர்கள் தங்களது கருத்துகளை பலவாராக தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஒரு சிலர், இதற்கு வரவேற்பு தெரிவிக்க, இன்னும் சிலர், “இது சிறப்பான சம்பவம் எல்லாம் கிடையாது, ஆப்புதான்” என்று கூறுகின்றனர். எதுவாக இருப்பினும் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

மேலும் படிக்க | வட சென்னை 2 வருமா வராதா? வெற்றிமாறன் சொன்ன பதில் என்னன்னு நீங்களே பாருங்க..

மேலும் படிக்க | வடசென்னை 2ல் தனுஷும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை.. அப்போ இவரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News