Mamitha Baiju Heroine Of Shankar Son First Movie : கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்றவர், ஷங்கர். இவரது வாரிசுகளும் சினிமாவிற்குள் பிரவேசம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அவரது மகன் திரையுலகிற்குள் நுழைய இருக்கிறார். அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சினிமாவில் களமிறங்கும் ஷங்கரின் மகன்!
இயக்குநர் ஷங்கருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில், கடைசி மகனான அர்ஜித் ஷங்கர், தற்போது புதிதாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகிற்குகள் வரும் நட்சத்திரங்களின் வாரிசுகள், துணை நடிகர்களாக அல்லது உதவி இயக்குநர்களாக தங்களது கெரியரை ஆரம்பிப்பர். அந்த வகையில், தற்போது ஷங்கரின் மகனும் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில்தான், ஷங்கரின் மகன் உதவி இயக்குநராக அறிமுகமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. இதன் பிறகு, ஷங்கரின் மகன் தனது முதல் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.
யார் அந்த நாயகி..
அர்ஜித் ஷங்கருக்கு ஜோடியாக அவரது முதல் படத்தில் நடிக்க இருப்பது வேறு யாருமில்லை, இப்பாேது ட்ரெண்டிங்கில் இருக்கும் 23 வயது மமிதா பைஜூதான். பிரேமலு திரைப்படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், தமிழில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக ரெபல் என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு, இப்போது விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
மமிதா பைஜூ, இப்போது ஷங்கரின் மகன் நடிக்கும் முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

விஜய் மகனின் நண்பர்..
திரை வாரிசுகள் பலரும், நெருங்கிய நட்பு பாராட்டுவது இயல்பான விஷயம். அப்படி, விஜய்யின் மகன் சஞ்சயுடன் நல்ல நட்புறவில் இருப்பவர் அர்ஜித். ஷங்கரின் மூத்த மகள் திருமணத்திற்கு விஜய்யே வராத நிலையில், அவரது மனைவி சங்கீதா மற்றும் மகன் ஜேசன் சஞ்சய் மட்டும் வந்து மணமக்களை வாழ்த்தியிருந்தது பரவலாக பேசப்பட்டது. அதே போல, ஜேசனும் இயக்குநராக சந்தீப் கிஷனை வைத்து ஒரு படத்தை இயக்கி திரையுலகிற்குள் அறிமுகமாவதும் குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.
ஏற்கனவே நாயகியாக இருக்கும் ஷங்கரின் மகள்..
இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர், மருத்துவ பட்டப்படிப்பை முடித்தவர். வீட்டில் டாக்டருக்கு படிக்க வைத்தாலும், தனக்கு அதில் நாட்டமில்லை என்று கூறிய இவர், திரைத்துறைக்கு வந்து விட்டார். இவர், முதன் முதலில் அறிமுகமான படம், விருமன். இதில் அவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமாக அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தான் செய்யும் செயல்களால் சில முறை அவர் ட்ராேல் செய்யப்பட்டாலும், இவரது இயல்பான குணாதிசயத்தை பிடித்த பலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
மேலும் படிக்க | சூர்யாவின் முதல் காதல் நாயகி..ஜோதிகா கிடையாது! வேறு யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









