எதிர்நீச்சல் 2... படு மொக்கையாக போகும் தொடர்.. ரசிகர்கள் புலம்பல்

Latest News Ethirneechal 2: எதிர்நீச்சல் முதல் பாகம் நிறைவுபெற்று தற்போது எதிர்நீச்சல் 2 தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், மக்கள் இந்த சீரியலை கழுவு ஊற்றி வருகின்றனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 16, 2025, 04:56 PM IST
  • எதிர்நீச்சல் தொடர் திருச்செல்வம் இயக்கத்தில் தொடங்கப்பட்டது.
  • படு மொக்கையாக இருக்கிறது.
எதிர்நீச்சல் 2... படு மொக்கையாக போகும் தொடர்.. ரசிகர்கள் புலம்பல்

Latest News Ethirneechal 2: எதிர்நீச்சல் முதல் பாகம் நிறைவுபெற்று தற்போது எதிர்நீச்சல் 2 தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், மக்கள் இந்த சீரியலை கழுவு ஊற்றி வருகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

எதிர்நீச்சல் தொடர் கடந்த 2022 ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் தொடங்கப்பட்டது. இந்த தொடர், பெண்களின் உரிமையை மையபடுத்தி எடுக்கபட்ட தொடராகும். ஆணாதிக்கத்தை உடைத்து “ஆணுக்கு பெண் நிகர்” என்ற கருத்தை குறிப்பிட்டு எடுக்கப்பட்ட தொடர் இதுவாகும். இந்த தொடர், மக்கள் மத்தியில் பெரிதளவில் வரவேற்பை பெற்ற டாப் சீரியல் ஆகும்.

இலக்கை நோக்கி வாழ்க்கையை தேடி செல்லும் பெண்ணாக, எதிர்நீச்சல் தொடரில் வருபவர் ஜனனி. வீட்டின் பெண்களை ஆண்கள் மதிக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கும் கதாப்பாத்திரம் இது. எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாப்பாத்திரங்களாக ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா ஆகிய நான்கு பெண்கள் வருவர். இவர்களை மையபடுத்தியும், குடும்ப தலைவன் ஆதிகுணசேகரன் கதாப்பாத்திரம் போன்றவற்றை மையமாக கொண்டும் எடுக்கப்பட்ட தொடர் இது. வீட்டிற்கு வரும் மருமகள்களை அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த சீரியிலின் முக்கிய கதாப்பாத்திரமாக வரும் குணசேகரனின் நோக்கமாக இருக்கும். 

குணசேகரனின் ஆணாதிக்க நோக்கத்தை உடைக்க ஜனனி புதுமைப்பெண்ணாக உருவெடுத்து வீட்டின் கடைசி மறுமகளாக வருவாள். அதன்பின் ஜனனியின் எண்ணங்களை பார்த்து வீட்டில் இருக்கும் பெண்கள் அவளிடம் தோழிபோல் பழக ஆரம்பிக்கத் தொடங்குவார்கள். ஆதி குணசேரகன், தன் வீட்டு பெண்கள் காலடியில் இருக்க வேண்டும் என்று அதிகாரமாய் இருப்பார். இவருக்கு ஜனனி தன் துணிச்சலான செயல்களால் அடிமேல் அடிக்கொடுப்பார். சீரியலில் குணசேகரினின் ஆணாதிக்க செயலைப் பார்க்கும் பெண்கள் சீரியஸாக குணசேகரனைத் திட்டுக்கொண்டே தொடரை பார்த்து வந்தனர். 

வீட்டில் அப்பத்தா கதாப்பத்திரத்தில் நடிக்கும் ‘பட்டம்மாள்’ ஜனனிக்கு மிகவும் அரவணைப்புடனும் ஆதரவாகவும் இருப்பார். ஜனனியின் தைரிய செயலைப் பாரட்டி அப்பத்தா ஜனனியிடம் பாசமாக நடந்துக்கொண்டு அனைத்திற்கும் ஆதரவளித்து வருவார். தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வந்த இந்த தொடர், சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடித்த மாரிமுத்து உயிரிழப்புக்கு பிறகு, இந்த தொடரின் டி.ஆர்.பி கொஞ்சம் சறுக்கியது. சீரியல் குழு எப்படியோ சமாளித்து இதனை ஒரு வழியாக முடித்தனர். தற்போது இதன் இரண்டாவது பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

இரண்டாம் பாகம் தொடங்கிய முதலே மக்கள் என்ன இது படு மொக்கையாக இருக்கிறது என்று ரசிகர்கள் புலம்பினர். இதில் மீண்டும் முதல் பாகம் போலவே குணசேரகன் வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்த ஆரம்பித்துவிட்டார். இதில் மிகவும் மோசமானது என்னவென்றால் நேற்று ஈஸ்வரி குணசேகரன் குளிக்க உதவி செய்துள்ளார்.

அந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள், மொக்க சீரியல், நல்லது பா நாம் இந்த சீரிய ல பாக்குரது இல்ல கொடுமை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் தற்போது சீரியலில் இருந்த மவுசு இன்னுமும் குறைந்துள்ளது.

மேலும் படிக்க | கணவரிடம் வரதட்சணை வாங்கிய ரம்யா பாண்டியன்! அதற்கு காரணம் இதுதான்..

மேலும் படிக்க | நடிகர் ஸ்ரீ-க்கு இப்படியொரு நோயா? இப்போது எங்கு இருக்கிறார்? நண்பர் சொன்ன தகவல்.. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News