First Choice For Pariyerum Perumal Hero : 2018ல் வெளியாகி, சமூகத்தில் பெரிய தாக்கதத்தை ஏற்படுத்திய படம், பரியேறும் பெருமாள். இந்த படத்தில், முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் என்பதை மாரி செல்வராஜ் சமீபத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
பரியேறும் பெருமாள்:
மாரி செல்வராஜ் முதன் முதலாக இயக்கியிருந்த படம் பரியேறும் பெருமாள். ‘தாமிரபரணியில் கொல்லப்பட்டவர்கள்’ என்ற சிறுகதை தொகுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் இது. பா ரஞ்சித்தின் தயாரிப்பில் முதன் முதலில் வெளியான படமானது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி அருகில் இருக்கும் கிராமத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன், பரியன். அம்பேத்கரை போல பெரிய வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசையோடு கல்லூரியில் சேரும் இவன், அங்கு ஜோதி எனும் பெண்ணை சந்திக்கிறான் அவளுடன் நண்பனாக பழகுகிறான். ஆனால் ஜோவிற்கு இவன் மேல் காதல் வருகிறது. இதை தெரிந்து கொள்ளும் ஜோவின் குடும்பத்தார் பரியனை அழைத்து மிரட்டுகின்றனர். சமூகத்தில் என்னென்ன சாதிய பிரச்சனைகள் இருக்கின்றன என்பதையும், தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கின்றன என்பதையும் இந்த படம் தோலுரித்து காண்பித்திருந்தது.
ஹீரோவாக நடித்தவர்..
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில், ஹீரோவாக நடித்திருந்தவர் கதிர். இவருடன் கயல் ஆனந்தி ஜோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பரியன் கதாப்பாத்திரத்திற்கு, தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதற்கு காரணம், கதிரின் நடிப்பும் அவரது கதாப்பாத்திரத்தின் ஆழமும்தான். இதற்காக அவருக்கு சைமா விருது, பிற ஊடக விருதும் கிடைத்தது. இதையடுத்து, கதிருக்கு ஒரு ஹிட் வெப் தொடரில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், இதில் நடிக்க முதலில் தேர்வான நடிகர் அவர் கிடையாது.
இதில் நடிக்க முதலில், அதர்வாவைத்தான் அப்ரோச் செய்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். ஆனால், அதர்வா அப்போது இந்த கதையில் நடிக்க மருத்ததால், அந்த வாய்ப்பு கதிருக்கு சென்றிருக்கிறது.
உண்மையை உடைத்த மாரி செல்வராஜ்..
டிஎன்ஏ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில், மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போதுதான் பரியேறும் பெருமாள் கதையை முதலில் சென்ன ஹீரோ அதர்வாதான் என்று கூறியிருக்கிறார். மேலும், முரளியை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் இதனால், தனது கதையில் அப்போது அதர்வாவைத்தான் ஃபிக்ஸ் செய்ய வேண்டடும் என்றுதான் நினைத்து கொண்டிருந்ததாகவும் பேசியிருக்கிறார். அவர் வேறு படங்களில் பிசியாக இருந்ததால், தனக்கு மிகுந்த வருத்தமாக இருந்ததாகவும் கூறியிருந்தார். இவரையடுத்து அதர்வா பேசினார். அப்போது, பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்காததால் எந்த வருத்தமும் இல்லை என்று கூறினார். காரணம் அப்படத்தில் கதிர், தன்னை விட நன்றாக நடித்திருந்ததாகவும் கூறியிருந்தார்.
36 வயதான அதர்வா, மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆவார். பானா காத்தாடி படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பரதேசி, இமைக்கா நொடிகள், கணிதன், 100 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவரது டிஎன்ஏ படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க | நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா முரளி! வெளியானது பர்ஸ்ட் லுக்!
மேலும் படிக்க | அதர்வா நடிக்கும் 'டிஎன்ஏ' (DNA)! மாஸாக வெளியான ட்ரைலர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ