Heera Shocking Allegations Against Actor Ajith Kumar : தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர், நடிகை ஹீரா. இவர், தனது வலைதளத்தில் (Blog Website) ஒரு நடிகர் என பெயரை குறிப்பிடாமல் அஜித் பற்றி பேசியிருக்கும் விஷயங்கள், படிப்பாேரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர் அப்படி அஜித் குறித்து என்ன பேசினார்? முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
அஜித்தின் முன்னாள் காதலி..!
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை ஹீரா. தமிழில் இதயம் படம் மூலம் அறிமுகமான இஅவர் பின்பு நீ பாதி நான் பாதி, என்றும் அன்புடன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரை மேலும் பிரபலப்படுத்திய படங்கள், அவ்வை ஷன்முகி சதி லீலாவதி ஆகியவை. 1984ல் ஆரம்பித்து 1999 வரை திரையுலகில் ஆக்டிவாக இருந்த இவர் திடீரென்று காணாமல் போய்விட்டார்.
அஜித்தும் ஹீராவும் ஒரு படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அப்போது காதலில் விழுந்த இவர்கள், தொடர்ந்து சில வருடங்கள் டேட்டிங் செய்ததாகவும் சில மாதங்கள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவருக்கும் பிரேக்-அப் ஆனது. ஹீரா, போதைக்கு அடிமையானதுதான் அதற்கு காரணம் என அப்போது அஜித் சொன்னதாக கூறப்பட்டது. அதன் பிறகு, அஜித் ஷாலினியை திருமணம் செய்து கொள்ள, ஹீரா எங்கு சென்றார், எப்படி இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
ஹீரா வெளியிட்ட அதிர்ச்சி பதிவுகள்!
நடிகை ஹீரா, Heera alaya என்ற பெயரில் ஒரு இணையதள பக்கத்தை வைத்திருக்கிறார். இதில், அவர் சமீபத்தில் அஜித்திற்கு எதிராக எழுதியிருக்கும் விஷயங்கள், அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது.
Actress #Heera about one Gentleman pic.twitter.com/8rqrH9kC50
— (@itzmee_jd) April 28, 2025
இளம் வயதில் தன் மீது திட்டமிட்டு சுமத்தப்பட்ட பழிகளால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறியிருக்கிறார், ஹீரா. தான், பல வருடங்களாக காதலித்த ஒரு நடிகர், தன்னை ஏமாற்றுபவள், போதைக்கு அடிமையானவள் என்றெல்லாம் பொய் பிரச்சாரம் செய்து தன்னை அசிங்கப்படுத்தியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இளம் வயதில் தான் காதலித்து, ஆதரவு கொடுத்த ஒரு நடிகர், ஒரே இரவில் தன் வாழ்வின் மிக கொடுமையான மனிதராக மாறியதாக கூறியிருக்கிறார். அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்த போது, அவருக்கு bedpan மாற்றியது முதற்கொண்டு பல விஷயங்களை தான் செய்ததாகவும், அந்த அறுவை சிகிச்சையில் இருந்து மீண்ட பிறகு, ஒரு பதிலும் கொடுக்காமல் தன்னுடனான தொடர்பை அவர் துண்டித்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார் ஹீரா.
அந்த நடிகர், தனது படங்களால் ரசிகர்களை வன்முறைக்கு தூண்டுவதாக கூறியிருக்கும் ஹீரா, மன்னிக்க முடியாத வகையில் தனது கௌரவம், நேர்மை மற்றும் பாதுகாப்பின் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறியிருக்கிறார். இவை அனைத்து தன்னை கடும் மன வேதனைக்கு உள்ளாக்கியதாகவும் தனக்கு தற்கொலை எண்ணம் இதனால் வந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மீண்டும் அவருடன் சந்திப்பு!
எந்த விளக்கமும் இன்றி பிரேக்-அப் செய்த பிறகு, தான் அந்த நடிகரை ஒரு ஸ்டுடியோவில் சந்தித்ததாக குறிப்பிட்டிருக்கும் ஹீரா, அங்கு நடந்த சம்பவத்தையும் விவரித்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் ரொம்ப அழுததாகவும், அவரிடம் உண்மையை கூறுங்கள் என கெஞ்சியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் ஹீரா. அதற்கு அந்த நடிகர், “வேலைக்காரி போல இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போகிறேன். அவளை யாரும் பார்க்க மாட்டார்கள். எனக்கு யார் வேண்டும் என்றாலும் அவர்களுடன் சென்று உடலுறவு வைத்துக்கொள்வேன்” என அவர் கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
அவரால் தன்னையறியாமல் தூண்டப்பட்ட அவரது ரசிகர்கள் தன் மீது வன்முறை தாக்குதல் நடத்துவேன் என்று அச்சுறுத்தும் வகையிலான மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.
இணையதளம் முடக்கம்!
ஹீரா, இதனை வெளியிட்டு இது இணையத்தில் வைரலான சில மணி நேரங்களிலேயே அவரது இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதனை போட்டோவாக பதிவிட்டவர்களின் பதிவுகளும் டெலிட் செய்யப்பட்டு வருகிறது.
இதில் அவர் ஒரு முறை கூட அஜித்தின் பெயரை கூறவில்லை என்றாலும், இவர் அஜித் குறித்துதான் பேசுவதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர். இன்னும் சிலர், “ச்சீ..அஜித் இப்படிப்பட்ட ஆளா?” என்று நம்ப முடியாமல் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | அஜித்திற்காக ஷாலினி செய்த தியாகம்! ச்சே..எவ்ளோ பெரிய மனசு..
மேலும் படிக்க | ஷாலினிக்கு முன் அஜித் காதலித்த பிரபல நடிகை! அட..இவங்களா? யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ'









