)
Trisha Instagram Post: குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இன்று காலை நடிகை திரிஷா போட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை திரிஷா:
தமிழ் திருக்கோலம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நாயகி இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளவர் நடிகர் திரிஷா. இவர் முதல் முதலில் கடந்த 1999 ஆம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு பிறகு கடந்த 2000 ஆம் ஆண்டு ரிலீஸான சூர்யாவின் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயாக அறிமுகமார். இதே ஆண்டில் பல ஹிட் படங்களை கொடுத்து அனைவரின் கனவுக்கன்னியாக மாறினார். இதையடுத்து எல்லாமே இவருக்கு ஏற்றம்தான். அதுவும் 40 வயதிலும் பிசியாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் ஒரே கதாநாயகி நடிகர் திரிஷா ஆவார்.
ஒரே ஆண்டில் பல படங்கள்:
இத்னிடையே இந்த ஆண்டு மட்டும் இதுவரை இவர் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகிவிட்டன. அதில் டொவினோ தாமஸ் ஜோடியாக அவர் நடித்த ஐடெண்டிட்டி திரைப்படம் ஜனவரி மாதம் வெளியானது, அடுத்ததாக பிப்ரவரியில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த விடாமுயற்சி ரிலீஸ் ஆனது. இப்போது மீண்டும் அஜித்துக்கு ஜோடியாக குட் பேட் அக்லி படத்தில் நடிகை திரிஷா நடித்துள்ளார்.
குட் பேட் அக்லி படத்தில் திரிஷா:
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கய குட் பேட் அக்லி படம் நேற்று உலக முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அஜித் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருதார். அஜித் ரசிகர்களுக்கு பக்கா ட்ரீட் ஆக இப்படம் அமைந்திருந்தது. இப்படி ஒரு பக்கம் பல பாசிட்டிவ் கமெண்ட்களை பெற்று வருகிறது குட் பேட் அக்லி படம், மறுபுறம் இன்று காலை திடீரென நடிகை திரிஷா கடும் கோபமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
இன்ஸ்டா ஸ்டோரியில் திரிஷா விளாசல்:
இந்நிலையில் தற்போது நடிகை திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி படு வைரலாகி வருகிறது. அந்த ஸ்டோரியில் அவர் கூறியிருப்பதவது " சமூக ஊடகங்களில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களைப் பற்றிய முட்டாள்தனமான விஷயங்களைப் பதிவிடும் Toxic மக்களே, நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறீர்கள்? நன்றாக தூங்குகிறீர்கள்? சோஷியல் மீடியாவில் அடுத்தவர்களை பற்றி நான்சென்ஸ் போஸ்ட் போடுவது தான் உங்கள் வேலையா?. இது கோழைத்தனம். காட் பிளஸ் யூ ஆல்" என தெரிவித்துள்ளார்.

திரிஷாவின் இந்த ஸ்டோரியை பார்த்தவர்கள் என்னாச்சு, ஏதாச்சு என குழப்பத்தில் உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ