ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி! அவசர சிகிச்சை-மருத்துவக்குழு கண்காணிப்பு..

Latest News AR Rahman Hospitalized : பிரபல இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Mar 16, 2025, 10:39 AM IST
  • ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவசர சிகிச்சை
  • நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையி அனுமதி!
  • ரசிகர்கள் பதற்றம்..!
ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி! அவசர சிகிச்சை-மருத்துவக்குழு கண்காணிப்பு..

Latest News AR Rahman Hospitalized : பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையி அனுமதி!

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர், ஏ.ஆர்.ரஹ்மான். இவர், திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரை தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர், லண்டனுக்கு சென்றிருந்த ரஹ்மான், சமீபத்தில் சென்னைக்கு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் லண்டனில் உள்ள ஒரு இசைக்கல்லூரியின் நிகழ்ச்சியுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். இதில் அவர் பிற மானவர்களின் இசை ஆர்வத்தையும், அவர்களின் திறமைகளையும் பாராட்டி பதிவிட்டிருந்தார்.

ரசிகர்கள் பதற்றம்!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகளவில் பல கோடி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தமிழ் மட்டுமன்றி பல மொழிகளில் பணியாற்றி இருக்கும் இவர் இந்தியிலும் பலரை தனது இசைக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறார். இவர் எந்த சிறிய விளம்பர படத்திற்கு இசையமைத்தாலும் கூட, ஒரு சிலர் அதை முண்டியடித்துக்கொண்டு போய் பார்த்து விடுவர். இந்த நிலையில், இவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற விவரம், ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால், ஏ.ஆர்.ரஹ்மானின் உடல் நிலை குறித்து தெரிந்து கொள்ள அனைவரும் சமூக வலைதளங்களில் பதற்றத்துடன் சுற்றி கொண்டிருக்கின்றனர்.

சகோதரி கொடுத்த தகவல்..

ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி பாத்திமா பேசிய ஆடியோ கிடைத்துள்ளது. அதில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பயப்படும்படி ஒன்றுமில்லை என்றும் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டு வந்ததால் நீரிழிப்பு பாதிப்பு காரணமாக (Dehydration) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு மருத்துவர்கள் ட்ரிப்ஸ் போட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

ரஹ்மான் சந்தித்த பிரச்சனைகள்..

சில ஆண்டுகளுக்கு முன்புவரை “சர்ச்சையையே சந்திக்காத திரை பிரபலங்கள் யார்?” என்று கேட்டிருந்தால் கண்களை மூடிக்கொண்டு “ஏ.ஆ.ரஹ்மான்” என்று பதில் சொல்லலாம். ஆனால், கடந்த 3 ஆண்டுகள் அந்த வரலாற்றையே மாற்றிவிட்டன. சென்னையில் கடந்த 2023ஆம் ஆண்டு “மறக்குமா நெஞ்சம்” என்ற கான்சர்டை நடத்தினார். இதில், ரூ. 10,000 பாஸ் வாங்கியவர்கள் முதல், குறைந்த விலை பாஸ் வாங்கியவர்கள் வரை பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர். அவர்களால், கான்சர்ட் நடந்த இடத்திற்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு அந்த இசை நிகழ்ச்சியை நடத்திய நிர்வாகம்தான் பொறுப்பு என்றாலும், சரியான நிர்வாகத்தை தேர்ந்தெடுக்கவில்லை என ஏ.ஆர்.ரஹ்மானை பலர் குற்றம் சாட்டினர்.

இது ஒரு புறமிருக்க, கடந்த ஆண்டு புயலாய் வந்து இறங்கியது ஏ.ஆர்.ரஹ்மானின் விவாகரத்து செய்தி. 30ஆம் ஆண்டு திருமண ஆண்டை கொண்டாட இருந்த சாய்ராவும், ஏ.ஆர்.ரஹ்மானும் திடீரென பிரிவது குறித்து பலவாராக யூடியூப் சேனல்கள் அடித்து விட்டன. போதாக்குறைக்கு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசைகுழுவில் இருக்கும் கலைஞர் ஒருவரும் தனது கணவரை பிரிவிதாக அதே நேரத்தில் அறிவிக்க, பிரச்சனை வேறு விதமாக திரும்பியது. அவருக்கும் ரஹ்மானுக்கும் தொடர்பு இருப்பதாக பலர் அவதூறு பரப்பினர். இதனால் ரஹ்மானும் அவரது மனைவியும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதையடுத்து தன் கணவர் மீது எந்த தவறும் இல்லை என்றும், தான் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் இப்படியொரு முடிவை எடுத்ததாகவும அவரது மனைவி விளக்கம் கொடுத்தார்.

மேலும் படிக்க | ஏ.ஆர்.ரஹ்மானை பிரிய காரணம் இதுதான்! சாய்ரா பானு வெளியிட்ட பரபரப்பு ஆடியோ..

மேலும் படிக்க | AR Rahman Birthday: அடேங்கப்பா! இமயத்தை எட்டும் ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு! எவ்வளவு கோடி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News