Jailer 2 Movie Villain : ரஜினிகாந்த் நடிப்பில், 2023ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். இதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் வில்லன் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஜெயிலர் 2:
கமர்ஷியல் ஹீரோவாக மாறிய பிறகு, தொடர்ந்து மாஸ் படங்களிலேயே நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அப்படி, அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த படம்தான் ஜெயிலர். இந்த படத்தில், ரஜினிகாந்துடன் சேர்ந்து ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ஜெயிலர் திரைப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் கெளரவ தோற்றங்களில் வந்தனர். ஜெயிலர் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதன் ப்ரமோ வீடியோவில் நெல்சனும் அனிருத்தும் நடித்திருந்தனர்.
வில்லன் இவரா?
ஜெயிலர் 2 படத்தின் வில்லன் யார் என்பது குறித்த விவரம் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அவர் ஒரு மலையாள நடிகர். தமிழில் சிவகார்த்திகேயன் படம் ஒன்றின் மூலமாக தமிழில் வில்லனாக அறிமுகமான இவர், இப்போது இந்திய அளவில் பெரிய நடிகராக மாறிவிட்டார். அவர் சமீபத்தில் நடித்த சில படங்கள் கூட மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. அந்த நடிகர் யார் தெரியுமா?
அவர் வேறு யாருமில்லை, ஃபகத் பாசில்தான். வேலைக்காரன் படத்தில் வில்லனாக வந்த இவர், அதன் பிறகு தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்திருந்தார். கடைசியாக அவர் நடித்திருந்த மாமன்னன் படத்தின் வில்லன் கதாப்பாத்திரமும் ரசிகர்களை ஈர்த்தது. மலையாள படமான ஆவேஷம் படமும் ஹிட்ஆனது. இந்த படத்தை அடுத்து, சமீபத்தில் புஷ்பா 2 படத்திலும் வில்லனாக நடித்து பான்-இந்தியா ஸ்டராகா மாறிவிட்டார்.
ஏற்கனவே ரஜினியுடன் நடித்தவர்..
நடிகர் பகத் பாசில், ஏற்கனவே ரஜினியுடன் சேர்ந்து ஒரு வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். இதில் அவர் பாட்ரிக் (பேட்டரி) என்ற கதாப்பாத்திரத்தில் வந்தார். இதில் அவருக்கும் ரஜினிக்கும் இடையே இருந்த நட்பு மக்களை ஈர்த்தது. அதே நேரத்தில் இவரது கதாப்பாத்திரம் இறந்து போனதும் பலரை கலங்க வைத்தது. இந்த நிலையில், மீண்டும் ரஜினிகாந்த்-பகத் பாசிலின் கூட்டணியை மீண்டும் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இவர்தான் வில்லனா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஜெயிலர் 2-க்கு பிறகு நெல்சன் இயக்கும் படம்! ‘இந்த’ 41 வயது நடிகர்தான் ஹீரோ..
மேலும் படிக்க | Jailer 2 Update: 'ஜெயிலர் 2' படத்தில் இணைந்த பிரபலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ