)
Keanu Reeves Married Alexandra Grant : இந்தியாவில் எப்போதும் சில ஹாலிவுட் நடிகர்களுக்கென ரசிகர் கூட்டம் இருக்கிறது. பிரபலமான ஹாலிவுட் franchiseகளான மார்வல், டிசி உள்ளிட்டவற்றின் கீழ் வெளியாகும் படங்களுக்குதான் அப்படிப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கும். இருப்பினும் ஒரு சில க்ளாசிக் படங்களுக்கான ரசிகர்களும் இங்கு அதிகம். அப்படி,இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கேரக்டராக இருப்பது ‘ஜான் விக்’. இந்த கேரக்டரில் நடித்தவர், கியானு ரீவ்ஸ்.
ஜான் விக்-கியானு ரீவ்ஸ்:
2014ல் வெளியான படம், ஜான் விக். இதுவரை அந்த படத்தில் இருந்து நான்கு பாகங்கள் வந்து விட்டன. இந்த படங்கள் யாவும் பல கோடி வசூலித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களாகும். இதன் வெற்றிக்கு பெரிய காரணமாக இருப்பவர், படத்தின் ஹீரோ கியானு ரீவ்ஸ். இலகுவாக சண்டை போடுவதும், எப்போதும் சிடு சிடு மூஞ்சுடன் படம் முழுவதும் வருவதும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இந்த படத்தில் வரும் கேரக்டருக்கும் எந்த மாதிரியான வாழ்க்கையோ, அதே போன்ற வாழ்க்கைதான் கியானு ரீவ்ஸின் நிஜ வாழ்க்கையும்.
கியானு ரீவ்ஸ், ஜெனிஃபர் சைம் என்பவரை காதலித்து வந்தார். இவர், 2001ஆம் ஆண்டு, தனது 28வது வயதில் கார் விபத்தில் இறந்தார். இதற்கு சில வாரங்களுக்கு முன்புதான், கியானுவுக்கும் ஜெனிஃபருக்கும் பிறந்த குழந்தை இறந்திருந்தது. இப்படி, ஒரே நேரத்தில் தனக்கு பிடித்த இரண்டு உயிர்களை இழந்த கியானு ரீவ்ஸ், மிகவும் உடைந்து போய்விட்டார். அதிலிருந்து சிங்கிளாகவே இருந்து வந்தார்.
பல ஆண்டுகளாக இருந்த நட்பு..
நடிகர் கியானு ரீவ்ஸ், இத்தனை ஆண்டுகளில் பெரிதாக யாரையும் டேட்டிங் செய்யவில்லை. தான் தனியாகவே இருந்து கொள்வேன் என்றும் பல நேர்காணல்களில் தெரிவித்து இருக்கிறார். ஆனால், அவர் சமீபத்தில் ஒருவருடன் காதல் உறவில் இருப்பதாக தகவல் வெளியானது.
அந்த பெண்ணின் பெயர், அலெக்ஸாண்ட்ரா கிராண்ட். இவர், கியானு ரீவ்ஸின் நீண்ட நாள் தோழி. 2009ல் ஆரம்பித்த இவர்களின் நட்பு, அப்படியே 10 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்துள்ளது. பின்னர் தங்களுக்குள் காதல் உணர்வுகள் இருப்பதை தெரிந்து கொண்ட இவர்கள், காதலிக்க ஆரம்பித்துள்ளனர்-டேட்டிங் செய்ய தொடங்கியுள்ளனர். இவர்கள் அவ்வப்போது ஒன்றாக வெளியில் சென்ற போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
ரகசிய திருமணம்?
கியானு ரீவ்ஸ், தனது காதலி அலெக்ஸாண்ட்ரா கிராண்டை ரகசியமாக ஐரோப்பாவில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அலெக்சாண்ட்ராவிற்கு 52 வயதாகிறது. இவருக்கு ஏற்கனவே இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. இருவரும் இப்பாேதைக்கு தங்களின் திருமண உறவு குறித்த செய்தியை பிரைவேட்டாக வைத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ