Actor Krishna Kulasekaran Marriage : பிரபல நடிகர் கிருஷ்ணா குலசேகரன், இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் யாரை திருமணம் செய்துள்ளார் தெரியுமா?

Actor Krishna Kulasekaran Marriage : தமிழ் திரையுலகில், கவனம் பெற்ற நடிகராக விளங்குகிறார், கிருஷ்ணா. பிரபல இயக்குநர் விஷ்ணு வரதனின் இளைய சகோதரர் ஆன இவர், சென்னையில் படித்து வளர்ந்தவர். இவரை மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலப்படுத்திய படம், கழுகு.
நடிகர் கிருஷ்ணா:
ஹிட் படங்களை கொடுக்காத ஹீரோ என்றாலும், கவனம் ஈர்த்த நாயகனாக மக்கள் மனங்களில் இடம் பெற்றிருப்பவர், கிருஷ்ணா. பிரபல சினிமா தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் இளைய மகனான இவர் முதன் முதலில் ஹீரோவாக நடித்தது, ‘அலிபாபா’ படத்தில்தான். ஆனா, நிதி பிரச்சனை காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அதன் பிறகு கழுகு படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் அவர் கொடைக்கானலில் மலையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்பவர்களின் உடல்களை மேலே தூக்கி வரும் தொழிலை செய்பவராக இருப்பார். இந்த படம் ஹிட் ஆனதோடு, நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றது.
தொடர்ந்து, யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன், வன்மம், யட்சன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவற்றில் சில இவருக்கு சறுக்கல்களை கொடுத்தன. தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த மாரி 2 படத்தில் இவர் துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்..
கடந்த 2014ஆம் ஆண்டு, கிருஷ்ணா ஹெமலதா ரங்கநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தி நன்றாக சென்றதாகவும் அதன் பிறகு ஹேமா தன்னை சந்தேகப்பட ஆரம்பித்ததாகவும் கிருஷ்ணா தெரிவித்தார். மேலும், அவர் தன்னை வார்த்தையாலும் உடலாலும் டார்ச்சர் செய்ததாகவும் கூறியிருந்தார்.
வரதட்சனை கேட்டு கொடுமை, பிற பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்றெல்லாம் கூறி தனக்கு எதிராக ஹேமா தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் மனு கொடுத்ததாகவும் கிருஷ்ணா கூறியிருந்தார். உடனடியாக தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரிக்கை வைத்த இவர், தன் வீட்டிலேயே தனக்கு பாதுகாப்பு இல்லை என்று அந்த சமயத்தில் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்குள் அதன் பிறகு விவாகரத்து ஆனதாக கூறப்படுகிறது.
ரகசிய திருமணம்:
கிருஷ்ணா, தனது சமூக வலைதள பக்கங்களில் திடீரென ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், “புது பயணம்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த போட்டோவில், ஒரு மாலையை இருவர் அணிந்திருப்பது போலவும், அவர்கள் சாமி சிலையின் முன்பு நிற்பது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இந்த திருமணம், சென்னையை தாண்டிய ஒரு இடத்தில் நடந்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து பிரபல பத்திரிகை ஒன்றுக்கு கிருஷ்ணா பேசியிருக்கிறார். அதில், இந்த திருமணம் எளிய முறையில் நடந்ததாகவும் இதில் மொத்தமே 80 பேர்தான் கலந்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார். தான் திருமணம் செய்து கொண்டிருப்பவர், தனக்கு நீண்ட நாள் தோழி என்றும், இனி வரும் காலங்களிலும் அவர் தனக்கு தோழியாக இருப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார். மணப்பெண்ணின் பெயர் சாத்வியா. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ