)
Joju George Accident : தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகராக இருப்பவர் ஜோஜு ஜார்ஜ். சமீபத்தில் வரிசையாக தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர், தற்போது விபத்தில் சிக்கியிருப்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜோஜூ ஜார்ஜுக்கு விபத்து!
தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வரும் ஜோஜு ஜார்ஜ், சமீபத்தில் கேரளா அருகே இருக்கும் மூணாரில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.இந்த படத்தின் பெயர், வரவு. இப்படத்தில் இவருடன் சேர்ந்து மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்பொல் நடிக்கிறார். சமீபத்தில், இப்படத்திற்காக ஒரு சேசிங் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது ஜோஜு ஜார்ஜ் ஓட்டிவந்த ஜீப், எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது.
இதில், ஜோஜு ஜார்ஜுக்கும் தீபக்கிற்கு பலத்த அடி ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்ந்து படத்தில் பணிபுரிந்த 6 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும், மூணாரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். இவர்களை மருத்துவர் குழு கண்காணித்து, தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜோஜு ஜார்ஜ் நடித்த தமிழ் படங்கள்!
மலையாள திரையுலகில், நடிகராக மட்டுமன்றி பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் ஜோஜு ஜார்ஜ். மலையாள மொழியில் இவர் கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் நடிக்கும் படங்களில் நெகடிவ் தோற்றங்களில்தான் வருவார்.
தமிழ் மொழியிலும் நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்த படங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ‘ஜகமே தந்திரம்’ படம் மூலம், கார்த்திக் சுப்புராஜ் அவரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அடுத்தடுத்து, தக் லைஃப் படத்திலும் நடித்தார். ரெட்ரோ படத்தில் வில்லனாகவும் சூர்யாவின் தந்தையாகவும் நடித்திருந்தார். இதில், இவரது கதாப்பாத்திரம் குறித்து பெரிதாக பேசப்பட்டது.
ஜோஜு ஜார்ஜின் தற்போதைய நிலை என்னவென்பது குறித்து ரசிகர்கள் பெரிதாக விசாரித்து வருகின்றனர். இது குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ