அஜித் பட நடிகர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு! ஓட்டலில் இருந்து தப்பியோடும் சிசிடிவி காட்சிகள்..

Shine Tom Chacko Accused Of Misbehaving Drug Usage : பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ மீது, பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஓட்டல் அறையில் இருந்து தப்பியோடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 17, 2025, 04:01 PM IST
  • சர்ச்சையில் சிக்கிய அஜித் பட நடிகர்
  • ஷான் டைம் சாக்கோ மீது அடுக்கடுக்கான புகார்கள்...
  • என்ன நடந்தது?
அஜித் பட நடிகர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு! ஓட்டலில் இருந்து தப்பியோடும் சிசிடிவி காட்சிகள்..

Shine Tom Chacko Accused Of Misbehaving Drug Usage : மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே தாெடர்ந்து நடித்திருந்தாலும், தமிழகத்திலும் பிரபலமானவராக வலம் வருபவர், ஷைன் டாம் சாக்கோ. இவர், சமீபத்தில் சிக்கியுள்ள சர்ச்சைகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Add Zee News as a Preferred Source

அஜித் பட நடிகர்!

கேரளாவை சேர்ந்த 41 வயது நடிகர், ஷைன் டாம் சாக்கோ. உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த இவர், தற்போது தென்னிந்தியாவின் பிரபலமான வில்லன் நடிகராகவும் வலம் வருகிறார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து கொண்டிருந்த இவர், பீஸ்ட் திரைப்படம் மூலம் கோலிவுட்டிற்குள் நுழைந்தார். தொடர்ந்து, தெலுங்கிலும் முதல் முறையாக நானி நடித்த தசரா படத்தில் வில்லனாக வந்தார். 

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற குட் பேட் அக்லி திரைப்படத்திலும் சைமன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் மீதுதான் தற்போது பாலியல் புகார் எழுந்துள்ளது.

பாலியல் வன்புணர்வு வழக்கு:

ஷைன் டாம் சாக்கோவுடன் வின்சி என்ற நடிகை சமீபத்தில் சூத்ரவாக்யம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அவர், ஷைன் டாம் மீது அதிர்ச்சிக்குறிய குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். படப்பிடிப்பின் போது, போதை பொருட்களை உபயோகித்து தன்னிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும் கேரளாவின் AMMA கமிட்டியிடம் புகார் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

இதற்கு முன்னர் அந்த நடிகை ஒரு முறை பேசியிருந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அந்த நடிகரின் பெயரை குறிப்பிடாமல் பேசிய அவர், ஒரு முறை தவறுதலாக அவர் வாயில் இருந்து ஏதோ வெள்ளையாக எச்சில் வெளியேறுவதை பார்த்ததாகவும், அதுவே அவர் போதை பொருள் உபயோகிக்கிறார் என்பதற்கு பெரிய சாட்சி என்றும் கூறியிருந்தார். மேலும், இதனால் படப்பிடிப்பில் பெரிய பிரச்சனையே எழுந்தது என்றும் அவர் கூறியிருந்தார்.

சிசிடிவி காட்சிகள்..

டாம் ஷைன் சாக்கோ, கொச்சியில் இருக்கும் ஒரு பிரபல ஓட்டலில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இந்த ஓட்டலில் போதை பொருள் ரெய்டு நடந்திருக்கிறது. அப்போது, இரவு சுமார் 11 மணியளவில் இந்த நடிகர் தனது ஓட்டல் அறையில் இருந்து தப்பியோடும் காட்சிகள் பதிவாகியிருக்கிறது. ஓட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து அந்த நடிகர் தப்பியோடுவது அதில் காட்சியாக பதிவாகியிருக்கிறது.

டாம் ஷைன், ஓட்டல் அறை 314ல் தங்கியிருந்ததாகவும், அவரை கையும் களவுமாக அதிகாரிகள் பிடிக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாட்ட கூடாது என நினைத்த அவர் அறையின் ஜன்னல் வழியாக எகிறி குடித்து தப்பித்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் பிறகு ஆள் அப்ஸ்காண்ட் ஆகியிருக்கிறார். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸார், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விஷயம், தற்போது தென்னிந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி! பெண் குழந்தைகள் குறித்து கேலிப்பேச்சு..என்ன சொன்னார்?

மேலும் படிக்க | தனுஷுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்.. யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News