தக் லைஃப் படத்திற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம்..முதல் முறையாக இத்தனை கோடியா?

Thug Life Movie Trisha Salary : கமல்ஹாசன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், தக் லைஃப் திரைப்படம். இந்த படத்திற்காக த்ரிஷா வாங்கியிருக்கும் சம்பளம் என்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jun 1, 2025, 06:54 PM IST
  • தக் லைஃப் படத்திற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம்
  • மொத்தம் எவ்வளவு?
  • முதல் முறையாக இத்தனை கோடியா?
தக் லைஃப் படத்திற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம்..முதல் முறையாக இத்தனை கோடியா?

Thug Life Movie Trisha Salary : விரைவில் வெளியாக இருக்கும் தமிழ் படங்களுள் ஒன்று, தக் லைஃப். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷா என்ன சம்பளம் வாங்கியிருக்கிறார் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

தக் லைஃப் திரைப்படம்..

ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம், தக் லைஃப். இந்த படத்தை, மணிரத்னம் இயக்கியிருக்கிறார். கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஜாேஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை, ராஜ் கமல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

டாப் நட்சத்திரங்கள் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தில் மணிரத்னம், கமல் மற்றும் சிம்புவின் காம்போ இணைந்திருப்பதால் இப்படம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த்ரிஷாவின் சம்பளம்..

நடிகை த்ரிஷா, தமிழ் திரையுலகின் டாப் நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார். கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் நாயகியாக வலம் வரும் இவர், விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என கிட்டத்தட்ட பெரும்பாலான டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். தக் லைஃப் திரைப்படம், த்ரிஷா-கமல் ஜோடியாக இணைந்து நடிக்கும் 2வது படமாகும். இவர்கள், ஏற்கனவே மன்மதன் அம்பு திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

தக் லைஃப் படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்-நடிகைகளுக்கும் மெகா சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. த்ரிஷா, பொதுவாக ஒரு படத்திற்கு சில வருடங்களுக்கு முன்னர், ரூ.5-7 கோடி வரை சம்பளம் வாங்கி வந்தார். பின்னர் அந்த சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தினார். இப்போது,  தக் லைஃப் படத்திற்காக அவர் தனது சம்பளத்தை சுமார் ரூ.12 கோடியாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பரபரப்பாக நிகழ்ந்து வரும் ப்ரமோஷன்..

எந்த படம் வெளியானாலும் அதற்கு ஏற்ற ப்ரமோஷன்கள் நடந்து வருவது அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில், தக் லைஃப் திரைப்படத்திற்கும் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் ஆரம்பித்து, கேரளா, துபாய் என படக்குழுவினர் பல்வேறு நகரங்களில் ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அவர்கள் பேசி வரும் விஷயங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

த்ரிஷாவின் அடுத்தடுத்த படங்கள்..

த்ரிஷா, அடுத்து இன்னும் பெரிய படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். மலையாளத்திலும் கால் பதித்திருக்கும் இவர், பல வருடங்களுக்கு பிறகு தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். விஸ்வாம்பரா என்கிற அந்த படத்தில் அவர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது 2 படங்கள் வெளியாகி விட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விஜய் பாடலை கேட்டவுடன் கண்கலங்கிய த்ரிஷா! வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | தக் லைஃப் படக்குழுவினரால் கடுப்பான மணிரத்னம்? காரணம் இதுதான்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News