)
Meera Mitun Ordered To Be Arrested : நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களிலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார். எப்போதும் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சையாக பேசி நெட்டிசன்களிடம் சிக்கிக்கொண்டு தவிப்பார். அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சினிமாத்துறையில் பட்டியலினத்தவர்களின் முன்னேற்றம் குறித்து அவதூறாக பேசி தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டார். அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.
இதுதொடர்பாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்த 2022ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமீன் பெற்று அவர்கள் வெளிவந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். அவர் டெல்லியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில், மீரா மிதுனின் தாயார் தனது மகளை காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தருமாரும் கோரி மனு அளித்துள்ளார். அதன் அடிப்படையில், மீரா மிதுனை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 ஆண்டுகளாக மீராமிதுன் தலைமறைவாக உள்ள நிலையில், இப்போது மீண்டும் அவர் குறித்த இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ