சாமி கதையில் இத்தனை நட்சத்திரங்களா? மூக்குத்தி அம்மன் 2 பட நடிகர்களின் லிஸ்ட்..

Mookuthi Amman 2 Pooja Ceremony : நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் பூஜை விழா இன்று நடைப்பெற்றதை தொடர்ந்து, இதில் நடிக்க இருப்பவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.  

Written by - Yuvashree | Last Updated : Mar 6, 2025, 05:51 PM IST
  • மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை
  • ரவி மோகன் கலந்து கொண்டார்..
  • கோயில் போல செட் போட்டு பூஜை..
சாமி கதையில் இத்தனை நட்சத்திரங்களா? மூக்குத்தி அம்மன் 2 பட நடிகர்களின் லிஸ்ட்..

Mookuthi Amman 2 Pooja Ceremony : சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருக்கும் படம், மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜை விழா இன்று வடபழனியில் உள்ள பிராசாத் லேபில் நடைப்பெற்றது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

மூக்குத்தி அம்மன் 2 பூஜை:

நயன்தாரா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடித்து இயக்கியும் இருந்தார். சாமியார்கள் எப்படி கடவுளின் பெயரை வைத்து மக்களிடம் கொள்ளையடிக்கின்றனர் என்பதை இந்த படம் கூறியது. ஊரடங்கு சமயத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட முடியாததால், இந்த படத்தை ஓடிடியில் வெளியிட்டனர். இது மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது. 

மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவில்லை. அவருக்கு பதிலாக சுந்தர் சி இயக்குகிறார். முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நயன்தாராவே, இந்த பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தின் பூஜை இன்று பெரிய அளவில் நடைபெற்றது. இதற்காக பிரசாத் லேபில், கோவில் போல செட் போடப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டு, பெரிய அளவில் பூஜை விழா நடைபெற்றது. 

படத்தில் இத்தனை பேரா?

நயன்தாரா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் பெரும்பாலான படங்களில், அவர் மட்டுமே ஸ்டார் ஆக இருப்பார். வேறு எந்த பெரிய நடிகர் அல்லது நடிகையும் இதில் இடம்பெற்றிருக்க மாட்டார்கள். ஆனால் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் அதற்கு ஆப்போசிட்டாக உள்ளது. இந்த படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து, மீனா, ரெஜினா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் பூஜை விழாவிற்கு நடிகர் ரவி மோகனும் (ஜெயம் ரவி) வருகை புரிந்தார். இவர் இந்த படத்தில் நடித்திருக்கிறாரா அல்லது விழாவிற்கு மட்டும் சிறப்பு விருந்தினராக வந்தாரா என்பது தெரியவில்லை. 

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது..

நயன்தாராவை முதன்மைப்படுத்தி எடுக்கப்படும் பல படங்கள், குறைவான பட்ஜெட்டிலேயே உருவாக்கப்படும். ஆனால், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக இருப்பதாக கூறப்படுகிறது. சுந்தர்.சி, இயக்குவதில் பெரும்பாலான திரைப்படங்கள் பேய் படங்களாக இருக்கும். அதிலும் கடைசியில் சாமி வந்து அந்த பேயை விரட்டுவது போல கதை அமைக்கப்பட்டிருக்கும். இப்பாேதுதான் அவர் ஒரு முழு நீள சாமி படத்தை எடுக்கிறார். இதிலும் மசாலா கலந்து ஒரு கதையை சொல்வாரா? கடைசியில் சாமி வேடம் போட்டவரை கிளாமர் டான்ஸ் ஆட வைப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குநர் யார்? ஆர்.ஜே.பாலாஜி இல்லை..‘இவர்’தான்!

மேலும் படிக்க | மூக்குத்தி அம்மன் 2 அப்டேட்.. மீண்டும் அம்மனாக மாறும் நயன்தாரா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News