)
James Vasanthan Positive Review To Thug Life : மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் 38 வருடங்கள் கழித்து உருவான படம், தக் லைஃப். இந்த படத்திற்கு எட்டுத்திக்கில் இருந்தும் நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்தன. இதையடுத்து ஒரு பிரபலம் இந்த படத்தை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
தக் லைஃப் திரைப்படம்:
மாஸ் ஹீரோக்களின் படங்கள் சமீப காலங்களாக பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தாலும், மக்களை ஈர்க்க தவறி வருகிறது. சில பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள், வசூலிலும் தோல்வியடைந்து விடுகின்றன. அப்படி கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படமும், இந்த ஆண்டு வெளியான தக் லைஃப் படமும் கமலுக்கு தாேல்வியை கொடுத்துள்ளன.
நாயகன் படத்தில் கடைசியாக இணைந்த மணிரத்னமும் கமலும், பல வருடங்களுக்கு பின்பு அதே போன்ற ஒரு கேங்க்ஸ்டர் கதையான தக் லைஃப் படத்தில் இணைந்தனர். கூடவே, சிம்புவும் கமலுக்கு இணையான ரோலில் நடித்திருந்தார். இவர்களுடன் த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் பட ரிலீஸிற்கு முன்பே ஹிட் அடித்தது. ஆனால், படம் ரசிரக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.
நெகடிவ் விமர்சனங்கள்:
பலர், தக் லைஃப் படத்தின் முதல் பாதியை பாராட்டி இருந்தாலும், அடுத்த பாதி தங்களை ரொம்பவே ஏமாற்றியதாக கூறினர். திரைக்கதை மனதோடு ஒட்டவில்லை என்றும், டைலாக்குகளும் மோசமாக இருப்பதாகவும் சிலர் கூறி வந்தனர். கமல் மற்றும் சிம்புவின் நடிப்புதான் படத்தை தூக்கி நிறுத்துவதாகவும் மற்றவை அனைத்தும் படத்தில் மைனஸ் என்றும் கூறினர். செலிப்ரிட்டிகளில், தக் லைஃப் படக்குழுவினரை தவிர வேறு யாரும் பெரிதாக இந்த படத்தை பற்றி பேசவில்லை. கார்த்திக் சுப்பிராஜ் மட்டும் படம் வெளியான போது பாசிடிவாக பதிவிட்டிருந்தார். தற்போது ஒரு பிரபலம் இந்த படம் தனக்கு பிடித்திருப்பதாக பேசியிருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தன்:
இசையமைப்பாளராகவும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருப்பவர் ஜேம்ஸ் வசந்தன். இவர், தக் லைஃப் படம் குறித்து பாராட்டி பேசியிருக்கிறார். பசங்க, ஈசன், சுப்ரமணியபுரம் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர், ரஹ்மானும் ரவி. கே. சந்திரனும் இந்தியாவுக்குக் இடைத்த வரங்கள் என்று கூறியிருக்கிறார்.
தான் தக் லைஃப் படத்தை சமீபத்தில் பார்த்து அசந்ததாகவும், இது மிகவும் நல்ல படம் என்றும் கூறியிருக்கிறார். மேலும், இதை ஏன் இவ்வளவு மோசமாக சிலர் விமர்சித்திருந்தனர் என்று தெரியவில்லை என்றும் அண்டர்வர்ல்ட் கேங்க்ஸ்டர் படத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த படம், ஆங்கில மொழியில் வெளியாகியிருந்தால் இதனை பலர் ரசித்து பாராட்டியிருப்போம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதில், ஒரு காட்சி கூட தனக்கு சலிப்பை ஏற்படத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கர்நாடகாவில் வெளியாகவில்லை..
நடிகர் கமல்ஹாசன், தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கர்நாடகா தமிழில் இருந்து பிறந்த மொழி என்று கூறினார். இது பெரும் பூகம்பமாக வெடித்தது. கன்னட மொழி பேசுபவர்கள் கமலை வசைபாடியதோடு, அவர் மன்னிப்பு கேட்டால்தான் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவோம் என்றும் மிரட்டினர். பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றத்தை கமல் நாடிய போதும் பயன் இல்லாமல் போனது. இதையடுத்து, தக் லைஃப் படத்தை வெளியிட வேண்டாம் என முடிவு செய்தார். இதையடுத்து, படம் தோல்வியுற்ற பின்பு, தற்போது படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆனால் முழு பாதுகாப்பு தருகிறோம் என கர்நாடக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதனால், இப்படத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ