Anirudh Marriage News : பிரபல இசையமைப்பளராக அனிருத், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது, ஆனால் இது தொடர்பாக அவரே தற்போது போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Anirudh Marriage News : தமிழ் இசை ரசிகர்களால், ‘ராக் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், அனிருத். 16 வயது பையனாக 3 படம் மூலம் அறிமுகமான இவர், இன்று இந்திய இசையுலகில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களுள் ஒருவர்.
அனிருத் ரவிச்சந்தர்:
இசையமைப்பாளர் அனிருத்தை பலருக்கு அறிமுகம் செய்து வைத்தது, 3 படத்தில் இடம் பெற்றிருந்த ‘Why This Kolaveri’ பாடல்தான். அதன் பிறகு, பெரிய ஹீரோக்களின் படங்கள் இவருக்கு தானாக அமைய, இப்போது பாலிவுட் வரை சென்று விட்டார். இவரது துள்ளளான இசைக்காக ரசிகர்கள் இவருக்கு வைத்த பெயர், ‘ராக் ஸ்டார்’. ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், ஜவான் படம் மூலம் இந்தி திரையுலகிலும், தேவரா படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகம் ஆனார்.
அனிருத், பிரபல துணை நடிகர் ரவி ராகவேந்திராவின் மகன் ஆவார். ஒரு வகையில், நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தம். இப்போது பிசியாக கூலி, மதராஸி, ஜன நாயகன், ஜெயிலர் 2 என்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதை தாண்டி, நாடு நாடாக சென்று ‘ஹுக்கும்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
விரைவில் திருமணம்?
அனிருத் மட்டுமல்ல, எந்த சினிமா செலிபிரிட்டியை எடுத்துக்கொண்டாலும், அவர்களை சுற்றி ஏதேனும் திருமணம் அல்லது காதல் குறித்த வதந்திகள் சுழல்வது வழக்கம். கடந்த ஆண்டு கூட, கீர்த்தி சுரேஷும் அனிருத்தும் இருக்கும் புகைப்படத்தை வைரலாக்கிய சிலர், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறி வந்தனர். இறுதியில் கீர்த்தி தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார்.
இசையமைப்பாளர் அனிருத், நீண்ட காலமாகவே ஒரு பெண்ணை காதலித்து வருவதாக தகவல்கள் இருக்கிறது. அந்த பெண் வேறு யாருமில்லை, ஐபிஎல் தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறன் என்று செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி இவர்கள் இருவக்கும் கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில் இந்த வதந்திக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது இசையமைப்பாளர் அனிருத் தனது X தளத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அதில் அவர், "கல்யாணமா? ஹாஹா.. கொஞ்சம் அமைதியா இருங்க நண்பர்களே..ப்ளீஸ் வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்க" என்று அவர் பரவி வந்த வதந்திகளுக்கு முழுமையாக முற்றிப்புள்ளி வைத்துள்ளார்.
Marriage ah? lol .. Chill out guys pls stop spreading rumours
— Anirudh Ravichander (@anirudhofficial) June 14, 2025
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ