அனிருத்துக்கு விரைவில் திருமணம்? மணப்பெண் யார் தெரியுமா? 33,400 கோடி சொத்துக்கு வாரிசு..

Anirudh To Marry Kavya Maran : பிரபல இசையமைப்பளராக அனிருத், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அவர் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jun 13, 2025, 10:22 AM IST
  • அனிருத்துக்கு விரைவில் திருமணம்?
  • மணப்பெண் யார் தெரியுமா?
  • பல கோடிகளுக்கு வாரிசு
அனிருத்துக்கு விரைவில் திருமணம்? மணப்பெண் யார் தெரியுமா? 33,400 கோடி சொத்துக்கு வாரிசு..

Anirudh To Marry Kavya Maran : தமிழ் இசை ரசிகர்களால், ‘ராக் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், அனிருத். 16 வயது பையனாக 3 படம் மூலம் அறிமுகமான இவர், இன்று இந்திய இசையுலகில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களுள் ஒருவர்.

அனிருத் ரவிச்சந்தர்:

இசையமைப்பாளர் அனிருத்தை பலருக்கு அறிமுகம் செய்து வைத்தது, 3 படத்தில் இடம் பெற்றிருந்த ‘Why This Kolaveri’ பாடல்தான். அதன் பிறகு, பெரிய ஹீரோக்களின் படங்கள் இவருக்கு தானாக அமைய, இப்போது பாலிவுட் வரை சென்று விட்டார். இவரது துள்ளளான இசைக்காக ரசிகர்கள் இவருக்கு வைத்த பெயர், ‘ராக் ஸ்டார்’. ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், ஜவான் படம் மூலம் இந்தி திரையுலகிலும், தேவரா படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகம் ஆனார்.

அனிருத், பிரபல துணை நடிகர் ரவி ராகவேந்திராவின் மகன் ஆவார். ஒரு வகையில், நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தம். இப்போது பிசியாக கூலி, மதராஸி, ஜன நாயகன், ஜெயிலர் 2 என்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதை தாண்டி, நாடு நாடாக சென்று ‘ஹுக்கும்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

விரைவில் திருமணம்?

அனிருத் மட்டுமல்ல, எந்த சினிமா செலிபிரிட்டியை எடுத்துக்கொண்டாலும், அவர்களை சுற்றி ஏதேனும் திருமணம் அல்லது காதல் குறித்த வதந்திகள் சுழல்வது வழக்கம். கடந்த ஆண்டு கூட, கீர்த்தி சுரேஷும் அனிருத்தும் இருக்கும் புகைப்படத்தை வைரலாக்கிய சிலர், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறி வந்தனர். இறுதியில் கீர்த்தி தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார்.

இசையமைப்பாளர் அனிருத், நீண்ட காலமாகவே ஒரு பெண்ணை காதலித்து வருவதாக தகவல்கள் இருக்கிறது. அந்த பெண் வேறு யாருமில்லை, ஐபிஎல் தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறன்தான். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

Anirudh

நீண்ட நாள் காதலா?

காவ்யா மாறன், சன் பிக்சர்ஸ் மற்றும் சன் நெட்வர்கின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் ஆவார். கலாநிதி மாறன், சன் நெட்வர்க் குழுவில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளின் போது, இவர் தனது டீம் நன்றாக விளையாடும் போதும், சொதப்பும் போது கொடுக்கும் ரியாக்ஷன்கள் செம க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கூறுவதுண்டு. சமூக வலைதளங்களில் பெரிதும் ஆக்டிவாக இல்லாத காவ்யாவும்-அனிருத்தும் பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகின்றனராம்.

சன் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு சுமார் ரூ.33,400 சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. அவரது வாரிசாக காவ்யா மாறன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையமைத்த படங்களின் இசை வெளியீட்டு விழாக்களுக்கு காவ்யா வந்திருக்கிறார். அனிருத்-காவ்யா திருமணம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அனிருத் இசையமைக்கும் அடுத்த தெலுங்கு படம்! யார் ஹீரோ தெரியுமா?

மேலும் படிக்க | ஒரு படத்திற்கு அனிருத் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News