)
Nayanthara Favorite Tamil Serial: நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று சினிமாவில் அழைக்கப்படும் அளவிற்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார். தவறாமல் இவர் பார்க்கும் சீரியல் எது என்று நீங்கள் தெரிந்துக்கொண்டால் ஷாக் ஆகிவிடுவீர்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருபவர், நடிகை நயன்தாரா. இவர், தமிழில் நடிகையாக இருப்பதோடு மட்டுமன்றி, சமீபத்தில் பெண்களுக்கான ப்யூட்டி ஸ்கின் கேர் பிராண்ட் ஒன்றை தொடங்கி அதை நடத்தி வருகிறார். கேரளாவில் பிறந்து வளர்ந்து மலையாள திரையுலகில் தனது திரை பயணத்தை ஆரம்பித்த நயன்தாரா, தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இந்த படத்தில் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து கஜினி, சிவகாசி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, வில்லு, ஸ்ரீ இராம ராஜ்யம், ராஜா ராணி, தனி ஒருவன், நானும் ரவுடி தான், அறம், இமைக்கா நொடிகள், பிகில், மூக்குத்தி அம்மன் என 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இப்படி தென்னிந்தியாவில் டாப் நாயகியாக வலம் வந்த இவர் அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். திரை உலகின் லேடி சூப்பர்ஸ்டார் ஆக ஜொலித்து வரும் இவர் சமீபத்தில் தன்னை யாரும் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நயன்தாரா தனது பிஸியான வேலைகளின் நடுவில் கிடைக்கும் நேரத்தை தனது குழந்தைகளுடன் செலவிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி சினிமாவில் சம்பாதித்த பணத்தை தொழிலில் நிறைய முதலீடு செய்து வருகிறார். டீ விற்பனை நிறுவனம், நாப்கின் நிறுவனம் என முதலீடு செய்துள்ளவர் 9 Skin என்ற அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் நடிகை நயன்தாராவுடன் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா தற்சமயம் பல படங்களை தான் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படி படு பிஸியாக இருக்கும் நயன்தாரா தான் தவறாமல் பார்க்கும் சீரியல் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாகும் "கயல்" சீரியலைத்தான் அவர் விரும்பி பார்க்கும் சீரியல் ஆகும். இந்த சீரியலில் ஒரு எபிசோடு விடாமல் பார்த்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. நடிகர் சஞ்சீவ் ஹீரோவாக, நடிகை சைத்ரா ரெட்டி ஹீரோயினாக நடித்து வரும் கயல் சீரியல்தான் நயன்தாராவிற்கு மிகவும் பிடிக்கும் என கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ