Allu Arjun First Reaction After Coming Out Of Jail : சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா 2 : தி ரூல். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம், உலகளவில் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, சில சர்ச்சைகளிலும் சிக்கியது. இந்த படத்தின் ப்ரீமியர் ஷோ, ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. அங்கு அல்லு அர்ஜுன் வருகை புரிந்ததை ஒட்டி, கூட்ட நெரிசல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதில் சிக்கி, 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இந்த நிலையில், அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அல்லு அர்ஜுன் கைது!


சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில், அதற்கு காரணமானது அல்லு அர்ஜுன்தான் எனக்கூறப்பட்டு முன்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐதராபாத் போலீஸார் நேற்று அல்லு அர்ஜுனின் இல்லத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைந்தனர். இது, அவரது ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இடைக்கால ஜாமீன்:


நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த இரவு முழுவதும் அவர் தரையில் படுத்ததாக கூறப்படுகிறது. கடைசியில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார். வந்தவுடன் அவர் என்ன கூறினார் தெரியுமா?


அல்லு அர்ஜுன் கூறிய விஷயம்:


சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த அல்லு அர்ஜுன், தான் நலமுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார். 



மேலும், தான் சட்டத்தை மதிக்கும் குடிமகன் என கூறிய அவர், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடந்து கொள்வேன் என்றும் கூறினார். முக்கியமாக, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்த அல்லு அர்ஜுன், தான் கடந்த 20 வருட காலங்களாக பட ரிலீஸின் போது தியேட்டருக்கு சென்று வருவதாகவும், 30 படங்களுக்கு இவ்வாறு சென்றிருப்பதாகவும் கூறினார். இத்தனை வருடங்களில் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை என்று கூறிய அவர், ஒருவரின் உயிரிழப்பை என்ன செய்தாலும் ஈடு செய்ய முடியாது என்று கூறினார். 


உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தான் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். 


நிவாரண தொகை:


புஷ்பா 2 பட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு, முன்னரே ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த அல்லு அர்ஜுன், அவர்களுக்கு 25 லட்சம் தருவதாகவும் அறிவித்திருந்தார். 


மேலும் படிக்க | Pushpa 2 : பெண் உயிரை காவு வாங்கிய புஷ்பா 2 படம்! ஒன்றுமே சொல்லாத அல்லு அர்ஜுன்..


அல்லு அர்ஜுனின் கைதுக்கு முன்னர், இந்த உயிரிழப்பில் சம்பந்தப்பட்ட சந்தியா திரையரங்க உரிமையாளர், மேலாளர் மற்றும் அந்த திரையரங்கில் காவல் அதிகாரி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அனைத்து சமூக வலைதளங்களிலும் அல்லு அர்ஜுன் கைது ட்ரெண்டிங்கில் இருந்ததை தொடர்ந்து, இதற்கு அவர் மட்டும் எப்படி பொருப்பாக முடியும் என்று பலர் காவல் அதிகாரிகளை நோக்கி கண்டன குரல்களை எழுப்பினர். நடிகை ராஷ்மிகா மந்தனாவும், தனது தரப்பில் இருந்து, இது குறித்து அதிர்ச்சி தெரிவித்து நேற்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். 


மேலும் படிக்க | Allu Arjun Arrest : நடிகர் அல்லு அர்ஜுன் கைது! என்ன காரணம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ