கூலி இசை வெளியீட்டு விழா எப்போது? எந்த இடத்தில் நடக்கிறது? இதோ விவரம்!

Coolie Audio Launch Date Where It Is Happening : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அது குறித்து இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jul 1, 2025, 12:10 PM IST
  • கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
  • எங்கு, எப்போது நடக்கிறது?
  • முழு விவ்ரம்!
கூலி இசை வெளியீட்டு விழா எப்போது? எந்த இடத்தில் நடக்கிறது? இதோ விவரம்!

Coolie Audio Launch Date Where It Is Happening : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம், கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பெரிய அளவில் நடக்க இருக்கிறது. அது எப்போது தெரியுமா?

Add Zee News as a Preferred Source

கூலி திரைப்படம்:

லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்துடன் முதன்முறையாக கைக்கோர்த்திருக்கும் திரைப்படம் கூலி. தேவா எனும் கதாப்பாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த், இதில் கொஞ்சம் மாறுபட்ட தோற்றத்தில் வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில், இதன் பிறகு வெளியாக இருக்கும் திரைப்படங்களில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.

இந்த படத்தில் பான் இந்தியா நடிகர்களான செளபின் சாஹிர், உப்பேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் அமீர் கானும் இதில் காமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவரது கேரக்டர், க்ளைமேக்ஸிற்கு 10 நிமிடங்களுக்கு வருவதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இசை வெளியீட்டு விழா:

வழக்கமாகவே, ரஜினியின் திரைப்படங்களுக்கு அவரது இசை வெளியீட்டு விழாவே பெரிய ப்ரமோஷனாக அமைந்து வருகிறது. ஜெயிலர், வேட்டையன் என சில திரைப்படங்களில் அவர் பேசிய விஷயங்களும் வைரலாகி இருக்கிறது. கூலி படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்.

எப்போதும், ரஜினி படத்தின் இசை வெளியீட்டு விழாக்கள் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும். கூலி படத்தின் இசைவெளியீட்டு விழாவும் அங்குதான் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. வரும் ஜூலை 27ஆம் தேதி, இந்த இசை வெளியீட்டு விழா நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

படம் எப்போது ரிலீஸ்?

கூலி திரைப்படம், வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ரிலீஸாக இருக்கிறது.

வெளியாவதற்கு முன்னரே கூலி செய்த சாதனை..

கூலி திரைப்படத்திற்கு, தமிழ் மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், உலகளவில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தின் வெளிநாட்டு உரிமம், தமிழ் சினிமாவில் முதன் முறையாக அதிக அளவில் விற்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் Overseas rights மொத்தம் ரூ.85 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னரே, இந்த படம் இவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறது.

ஆயிரம் கோடி அடிக்குமா?

கூலி படம், தமிழ் திரையுலகில் முதன்முறையாக ரூ.1000 கோடி வசூல் எடுக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி இருக்கும் திரைப்படங்கள் ஆயிரம் கோடியை வசூலித்திருக்கின்றன. இப்போது லோகிக்கும் ரஜினிக்கும் பெரிய மார்கெட் இருப்பதால், இப்படம் தமிழ் சினிமாவில் முதன்முறை ரூ.1000 கோடி வசூலிக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ரிலீஸிற்கு முன்பே கூலி படம் செய்த சாதனை! என்ன தெரியுமா?

மேலும் படிக்க | கூலி படத்தை பார்த்து ரஜினி சொன்ன விமர்சனம்! என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News