Jailer 2 Movie Shooting Starts : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம், ஜெயிலர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு ஆரம்பம்:
ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஷூட்டிங் தொடங்குவதாக ஜெயில் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Muthuvel Pandian's hunt begins! #Jailer2 shoot starts today@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/v72a7wXpDH
— Sun Pictures (@sunpictures) March 10, 2025
இந்த போஸ்டரில் “வேட்டை ஆரம்பம்” என்றும் குறிப்பிடப்பட்டதுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் 15 நாட்களுக்கு ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, தற்போது வைரலாகி வருகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜெயிலர் திரைப்படம், பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தில் வந்த கதாப்பாத்திரங்களே அடுத்த பாகத்திலும் தொடர இருக்கிறது. இதனால் ரசிகர்களுக்கு இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
யாரெல்லாம் தொடருவார்கள்?
ஜெயிலர் 1 படத்திற்கு இசையமைத்த அதே அனிருத்தான், ஜெயிலர் 2 படத்திற்கும் இசையமைத்துள்ளார். நெல்சன் உள்பட இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அதே குழுவினராகத்தான் இந்த படத்திலும் தொடர உள்ளனர். ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், மருமகளாக நடித்திருந்த மிர்னா மோகன் ஆகியோர் அதே கதாப்பாத்திரங்களில் தொடர உள்ளனர். மோகன் லால், சிவராஜ் குமார் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புது வில்லன்கள் இதில் களமிறக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
கூலி படப்பிடிப்பு முடிந்ததா?
லோகேஷ் கனகராஜ், இயக்கி வரும் படம் கூலி. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆரம்பித்தது. இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. அதே அனிருத்தான் இசையமைப்பாளராகவும் இருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் பாடல் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஐதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைப்பெற்றது. இதில் ரஜினி தேவா எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்திருக்கும் நிலையில், கூலி படப்பிடிப்பு முடிந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதையடுத்து, கூலி படத்தில் ரஜினிக்கான பகுதிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், அதன் பிறகுதான் அவர் ஜெயிலர் 2 படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரேக் எடுக்கும் ரஜினி?
நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு 3 மாதங்களுக்கு பிரேக் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 3 மாத இடைவேளையில் அவர் தனது சுய சரிதையை எழுத இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே அடுத்து எந்த இயக்குநருடன் இவர் கைக்கோர்க்க இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. ரஜினி, தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அதன் பிறகுதான் எந்த முக்கிய முடிவையும் எடுப்பார் என திரை வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்.
மேலும் படிக்க | கூலி படத்தில் அமீர்கான் போல-ஜெயிலர் 2 படத்திலும் பாலிவுட் நடிகர்! யார் தெரியுமா?
மேலும் படிக்க | ஜெயிலர் 2 படத்தின் வில்லன் இவர்தான்!! யாரும் எதிர்பார்க்காத ஒருவர்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









