Retro Movie First Day Box Office Collection : 2025ஆம் ஆண்டு வெளியாகும் படங்களில், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தூண்டிய படம், ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்த படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2D Entertainment நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் ஆகிவயை தயாரித்திருக்கின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சூர்யாவிற்கு, இந்த படம், கம்-பேக் கொடுக்கும் என்று அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு வீணானதா? நிறைவேறியதா? படத்தின் முதல் நாள் வசூல் என்ன? இங்கு பார்ப்போம்.
ரெட்ரோ திரைப்படம்:
80களில் நடக்கும் கதையை காண்பிக்கும் படமாக இருக்கிறது, ரெட்ரோ. இதில் சூர்யா பாரிவேல் (பாரி) எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தூத்துக்குடியில் நடக்கும் கேங்க்ஸ்டர் ட்ராமா கதைக்களத்தை இப்படம் கொண்டுள்ளது. இதில், பூஜா ஹெக்டே சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
ரெட்ரோ படம் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களை காண்பிக்கும் Non-Linear வடிவ கதையை கொண்டுள்ளதாக இருக்கிறது. இதில் பூஜா ருக்மிணி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜாேஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர்
பாக்ஸ் ஆபிஸ் வசூல்!
ரெட்ரோ திரைப்படம், மே 1 உழைப்பாளர் தின விடுமுறை, அதைத்தொடர்ந்து வீக்-எண்ட், கோடை விடுமுறை என அனைத்தையும் மனதில் வைத்து வெளியாகி இருக்கிறது. எதை நினைத்து படத்தை மே 1ஆம் தேதி வெளியிட்டார்களோ, அதற்கு ஏற்ற வசூலும் முதல் நாளில் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்கு தமிழகத்தில் மட்டுமல்ல, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளிலும் வெளியிட பல்வேறு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த படம், உலகளவில் சுமார் ரூ.28 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில்..
சூர்யாவிற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கேரளா, ஆந்திரா மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் மட்டும் இப்படம் சுமார் ரூ.19 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. இது, சூர்யாவிற்கு தமிழ்நாட்டில் முதன்முதலாக அவர் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங்காம்.
இதை கேட்ட பலர், “விடுமுறையில் வெளியாகியும் இவ்வளவுதான் வசூலா? ஒன்னும் பெருசா இல்லையே..” என்று கூறி வருகின்றனர். ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்று குறிப்பிடத்தக்கது.
கம்-பேக் படமாக அமைந்ததா?
சூர்யா நடிப்பில் கடந்த சில வருடங்களில் உருவான படங்கள் ஓடிடியில் வெளியாகின. எதற்கும் துணிந்தவன் படத்தை அடுத்து அவர் நடித்த படம் கங்குவா. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், ஓவர்-பில்ட் அப் காரணமாகவே ஓடாமல் போனதாக சில சினிமா விமர்சகர்கள் கூறினர். அதற்கு முன்னரே சூர்யாவின் மார்கெட் சரிவில் இருந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ்ஜின் ரெட்ரோ படம்தான் அவரை கைக்கொடுத்து தூக்க வேண்டுமென படம் வெளியாவதற்கு முன்பு சிலர் கூறிக்கொண்டிருந்தனர். ரெட்ரோ படத்தின் விமர்சனம் கலவையாக இருந்தாலும், சூர்யாவின் அரக்கத்தனமான நடிப்பை பார்க்க முடிந்ததாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். எனவே, இப்படம் கண்டிப்பாக அவருக்கு கம்-பேக் படமாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ரெட்ரோ படத்தின் முதல் பாதியின் திரைக்கதை கவனத்தை ஈர்க்கும் திரைக்கதையாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சொதப்பலாக இருப்பதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், போட்ட பட்ஜெட்டை கண்டிப்பாக படம் எடுத்து விடும் என்ற பேச்சும் அடிபடுகிறது. இந்த படத்தை தொடர்ந்து, சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதனை, ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.
மேலும் படிக்க | சூர்யாவின் சம்பவமா..சூர்யாவுக்கு சம்பவமா? ரெட்ரோ படம் எப்படி? X தள விமர்சனம்!
மேலும் படிக்க | Retro Movie Review | சூர்யாவின் ரெட்ரோ படம் எப்படி இருக்கு? இதோ திரை விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









