Samantha Ruth Prabhu Temple: தென்னிந்தியாவின் நட்சத்திர நாயகியாக விளங்குபவர், நடிகை சமந்தா. பானா காத்தாடி படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களின் நடித்து ரசிகர்களின் மனங்களின் இடம்பெற்றார். தற்போது இந்திய அளவில் பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திரை நட்சத்திரங்கள் சிலரை டேட்டிங் செய்த போதிலும், இவர் காதலில் விழுந்தது, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிடம்தான்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் ஜோடியாக நடித்த இவர்கள், அப்போது நல்ல நண்பர்களாக இருந்தனர். வருடங்கள் உருண்டோட, சில படங்களில் ஒன்றாக சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து, இவர்களுக்குள் இருந்த நட்பு நாளடைவில் பெரிய நெருக்கமாக மாறி, பின்னர் காதலுக்கு வழி வகுத்தது. சில ஆண்டுகள் காதலித்த பிறகு, இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பெரிய அளவில், நடந்த இவர்களின் திருமணம், 3 ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. 2021ஆம் ஆண்டில் இருவருமே பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர்.
நடிகை சமந்தா, தனது விவாகரத்து காலத்தில் மனமுடைந்து இருந்ததை அனைவராலும் கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால், தங்கள் திருமண வாழ்க்கையில் என்ன பிரச்சனை என்பது குறித்தோ, தாங்கள் ஏன் விவாகரத்து பெற்றனர் என்பது குறித்தாே இருவருமே வெளியில் பேசிக்கொள்ளவில்லை. இந்த விவாகரத்திற்கு பிறகு சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின. இப்படி சமந்தாவின் வாழ்வில் அடிக்கு மேல் அடி விழ, அவர் சில மாதங்கள் திரையுலகில் இருந்து விலகி பிரேக் எடுப்பதாக அறிவித்தார். இதனால், அவர் இப்போது வரை எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார்.
இதனிடையே இவர் சமீபத்தில் சிட்டாடல்: ஹனி பனி தொடரில் பணியாற்றினார். இந்த தொடர் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது இவர் ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இந்நிறுவனம் தயாரிப்பில் ‘மா இண்டி பங்காரம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் சமந்தா, அப்போது பேசிய அவர் நான் சினிமாவில் காலடி வைத்த போது, அப்போது காலத்தில் ஒரு நடிகரோ ஒரு நடிகையோ வெற்றிகரமாக இருக்கிறார் என்றால் ஏதோ ஒரு பிராண்டில் அவரது முகம் இருக்கிறது என்றாகும். அந்த நேரத்தில் நிறைய மல்டி நேஷனல் பிராண்டுகள் என்னை அவரது பிராண்ட் அம்பாசிடராக கேட்டனர். நானும், நல்ல புகழ், அங்கீகாரம் கிடைக்கிறது என்று ஏற்றுக்கொண்டு இந்த பிராண்டுகளில் நடித்தேன்.
ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு உடலில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் நான் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டேன். இப்போதெல்லாம் நான், ஒரு பொருளை விளம்பரப்படுத்துவதற்கு முன்பு குறைந்த பட்சம் மூன்று டாக்டர்களிடமாவது ஒப்புதல் பெற்றுக் கொள்கிறேன். கடந்த ஆண்டு எனக்கு சுமார் 15 பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வந்தன. ஆனால், நான் அந்த பிராண்ட் விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். அந்த விளம்பரங்களில் தற்போது நான் நடித்திருந்தால் கட்டாயன் கோடிக்கணக்கில் பணம் பெற்றுருப்பேன் என்று சமந்தா பேசி உள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | கணவரிடம் வரதட்சணை வாங்கிய ரம்யா பாண்டியன்! அதற்கு காரணம் இதுதான்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









